கோயில்களில் கோ பூஜை: விஸ்வ ஹிந்து பரிஷத் கோரிக்கை

கோயில்களில் கோ பூஜை: விஸ்வ ஹிந்து பரிஷத் கோரிக்கை
X

மதுரை கோயில்களில் மூன்று நாட்கள் கோ பூஜை நடத்த  வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள்

கோயில்களில் இம்மாதம் மூன்று நாட்கள் கோ பூஜை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டுமென விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஆட்சியரிடம் மனு

கோயில்களில் இம்மாதம் மூன்று நாட்கள் கோ பூஜை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்: விஸ்வ ஹிந்து பரிஷத்:

மதுரை மாவட்டத்தில் உள்ள கோயில்களில், இம்மாதம் 19 ,20 ,21 ஆகிய மூன்று நாட்கள் கோ பூஜை நடத்த கோவில் நிர்வாகங்கள் ஏற்பாடு செய்ய வேண்டுமென, விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் மதுரை மாவட்ட ஆட்சியிரிடம் மனு அளித்தனர் .

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இம்மாதம் 19, 20, 21 ஆகிய மூன்று தினங்கள், பசுக்களை பூஜைக்கின்ற தினமாக கொண்டாடப்படுகிறது .இந்த சமயத்தில், மதுரை மாவட்டத்தில் உள்ள கோயில்களில் மூன்று நாட்கள் பக்தர்கள் பசுவை பூஜை செய்ய அந்தந்த கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டுமென, விசுவ இந்து பரிஷத்தின் மாவட்டத் தலைவர் ஜெய கார்த்தி, சத் சங்க கோட்ட பொறுப்பாளர் வெங்கடேஷ், மாவட்டச் செயலாளர் தங்கராமு, திருக்கோவில் திருமடம் மாவட்ட பொறுப்பாளர் பிரபாகரன், பஜ்ரங்தள் மாவட்ட அமைப்பாளர் சங்கிலி முருகன் ஆகியோர்கள் கையில் திட்ட மனுவை, மதுரை மாவட்ட ஆட்சி சங்கீதாவிடம் அளித்தனர்.

Tags

Next Story