/* */

மதுரை நகரில் சேறும் சகதியுமாக சாலைகளால் சிரமப்படும் பொதுமக்கள்

இதன் காரணமாக இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் செல்வோரும், பாதசாரிகளும் கீழே விழும் நிலை ஏற்பட்டுள்ளது

HIGHLIGHTS

மதுரை நகரில் சேறும் சகதியுமாக சாலைகளால் சிரமப்படும் பொதுமக்கள்
X

 மதுரை மேலமடை ,தாசில்தார் நகர், கோமதிபுரம் ஆகிய பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர் 

வடகிழக்கு பருவமழை தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளிலும் , புதுவையிலும் இன்று 29 அக்டோபர் 2022 தொடங்கியுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.ஆரஞ்சு அலர்ட்: தமிழகத்திற்கு 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம். கடந்த அக்டோபர் 29 மற்றும் அக்டோபர் 30 ஆம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அக்டோபர் 31, நவம்பர் 1 மற்றும் நவம்பர் 2 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நவம்பர் 1 மற்றும் 2 ஆம் தேதி தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதன் காரணமாக மதுரை நகரில் கடந்த சில தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் , சாலைகள் பல சேரும் சகதியும் காணப்படுவதால், அப்பகுதி வழியே செல்லும் பாதசாரிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மதுரை மேலமடை ,தாசில்தார் நகர், கோமதிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள திருக்குறள் வீதி, வீரவாஞ்சி தெரு, காதர் மைதீன் தெரு, அன்பு மலர் தெரு, சௌபாக்கியா விநாயகர் கோவில் தெரு, மருதுபாண்டியர் தெரு ஆகிய தெருக்களில் ,மழை நீர் வடிந்து ஓட வழி இல்லாமல் குளம் போல தேங்கியுள்ளது. இதனால், இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் செல்வோரும், பாதசாரிகளும் கீழே விழுகின்ற நிலை ஏற்படுகிறது. இது குறித்து, மதுரை மண்டல உதவி ஆணையாளர் மற்றும் உதவி பொறியாளர்கள் கவனத்திற்கு கொண்டு சென்றும் கூட, உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என, ஜூபிலி டவுன் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இப்பிரச்னை தொடர்பாக மதுரை மாநகராட்சி ஆணையர், மற்றும் மேயர் ஆகியோர் துரிய நடவடிக்கை எடுத்து சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அகற்றி சாலைகளை சீரமைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இப்பகுதியானது மதுரை வடக்கு தொகுதிக்குள் வருவதால் சட்டமன்ற உறுப்பினரிடம் புகார் அளிக்கபொதுமக்கள் தயாராகி வருகின்றனர்.

குறிப்பாக, மதுரை நகரில், தாசில்தார் நகர், கோமதிபுரம், வீரவாஞ்சி தெரு ஆகிய தெருக்களில், நாய்கள் அதிகமாக சுற்றி திரிவதால், இரு சக்கர வாகனத்தில் செல்வோரை விரட்டி கடிக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளதாம்.ஆகவே, மதுரை மாநகராட்சியினர் , சாலைகளில் திரியும் நாய்களை பிடிக்க ஆர்வம் காட்ட வேண்டுமென தாசில்தார் நகர் பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Updated On: 6 Nov 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  3. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  4. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  5. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  6. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  8. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  9. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  10. ஈரோடு
    கோடை விடுமுறை கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!