மதுரையிலிருந்து கமுதிக்கு கொண்டு செல்லப்பட்ட பசும்பொன் தேவரின் தங்கக் கவசம்

மதுரையிலிருந்து கமுதிக்கு கொண்டு  செல்லப்பட்ட பசும்பொன் தேவரின் தங்கக் கவசம்
X

மதுரையிலிருந்து இன்று அனுப்பி வைக்கப்பட்ட பசும்பொன் தேவர் சிலைக்கான தங்கக்கவசத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த ஓபிஎஸ் மற்றும் முன்னாள் அமைச்சர்கள்

கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்துக்கு கார் மூலம் தங்க கவசம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது

பசும்பொன்னில் உள்ள நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு அணிவிக்கப்படவுள்ள தங்க கவசம் இன்று போலீஸ் பாதுகாப்புடன் பசும்பொன் கிராமத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

மதுரை, அண்ணாநகரில் உள்ள அரசு வங்கியில், பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ள, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின், முழு உருவ தங்கக் கவசத்தை, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வர் ஒபிஎஸ், தேவரின் வாரிசுதாரரிடம் திங்கள்கிழமை ஒப்படைத்தார். இந்த கவசம், உடனடியாக கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்துக்கு கார் மூலம், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.

முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு அணிவித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் மரியாதை செலுத்தினார். முன்னதாக, மதுரையில் முன்னாள் அமைச்சர்கள் சீனிவாசன், செல்லூர் கே. ராஜூ, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராசன் செல்லப்பா, பெரிய புள்ளான், ஐயப்பன், மதுரை மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் பாண்டியன் உள்ளிட்டோர், தேவரின் தங்க கவசத்தை வணங்கி வழிபட்டு அனுப்பி வைத்தனர்


Tags

Next Story