விறுவிறுப்பாக நடந்து முடிந்தது பாலமேடு ஜல்லிக்கட்டு..! ஒருவர் உயிரிழப்பு
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடம் வென்ற வீரருக்கு முதலமைச்சர் வழங்கிய கார் பரிசளித்த அமைச்சர் மூர்த்தி
உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறைவடைந்த நிலையில் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதல் பரிசாக கார், இரண்டாம் பரிசாக பைக் மற்றும் மூன்றாம் பரிசாக பசுமாடு ஆகியவை வழங்கப்பட்டன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் பங்கேற்கும் மாடுகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு உலக புகழ்பெற்ற பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
இதில், மதுரை, நெல்லை, திண்டுக்கல், திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, தஞ்சை, சேலம், கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த காளைகள் பங்கேற்றன.
காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கியது. பல்வேறு சுற்றுகளாக நடந்த இந்தப்போட்டி மாலை 5 மணிக்கு நிறைவடைந்ததது. சுற்றுக்கு தலா 25 வீரர்கள் வீதம் 325 வீரர்கள் களம் இறக்கப்பட்டனர். காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்த இந்தப்போட்டியில் 860 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து துள்ளி வந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு அடக்கினர். ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 23 காளைகளை அடக்கிய சின்னப்பட்டியைச் சேர்ந்த தமிழரசன் முதலிடம் பெற்றுள்ளார். பாலமேட்டைச் சேர்ந்த மணி 19 காளைகளை அடக்கி 2ஆம் இடம் பிடித்தார். .
முதலிடம் பெற்ற தமிழரசனுக்கு முதலமைச்சர் மு,க ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த மணிகண்டனுக்கு அமைச்சர் உதயநிதி சார்பில் பைக் பரிசாக வழங்கப்பட்டது. 3ஆம் இடம் பிடித்த வீரருக்கு பசுமாடு பரிசாக வழங்கப்பட்டது. சிறந்த காளைக்கான பரிசு மூன்று பேருக்கு கன்றுக்குட்டியுடன் பசுமாடு வழங்கப்பட்டது
9 காளைகளை அடக்கிய வீரர் மாடு முட்டி மரணம்...
மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்ட மாடு பிடி வீரர்கள் 12- பேர் காளை உரிமையாளர்கள் 15-பேர், பார்வையாளர்கள் 9-பேர், ஒரு காவல் ஆய்வாளர், ஒரு பத்திரிகையாளர் உள்பட மொத்தம் 38- பேர் காயமடைந்தனர். இதில் பாலமேட்டைச் சேர்ந்த மாடுபிடி வீரர் அரவிந்தராஜை மாடு முட்டியதில் அவரது குடல் சரிந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இவர் நான்காவது சுற்று வரை 9 காளைகளை அடக்கி இரண்டாவது இடத்தில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu