மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணைகள்: அமைச்சர் வழங்கல்
மதுரை மேற்கு ஊராட்சி மற்றும் கிழக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் 103 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகளை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார்:
மதுரை மாவட்டம், சொக்கிகுளத்தில் உள்ள மதுரை மேற்கு ஊராட்சி மற்றும் கிழக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 103 பயனாளிகளுக்கு 17.51 கோடி மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான ஆணைகளை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, வழங்கினார்.
இக்கூட்டத்தில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:தமிழ்நாடு முதலமைச்சர், கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிக் கொண்டு வருகின்றார். அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மதுரை கிழக்குத் தொகுதியிலே கிழக்கு ஒன்றியத்தில் 85 பயனாளிகளுக்கும் மற்றும் மேற்கு ஒன்றியத்தில் 17 பயனாளிகளுக்கும் வீடு கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முதலமைச்சர், திட்டத்தின் மூலம் இலங்கை வாழ் தமிழர்களுடைய இல்லங்களுக்கு சென்று ஆடைகள் சமைக்கும் பாத்திரங்கள் எரிவாயுகள் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை வழங்கி இருக்கின்றோம். தமிழ்நாடு முதலமைச்சர், ஆட்சிப்பொறுப்பேற்ற 6 மாத காலத்திற்குள் தினம் தினம் மக்களுக்காக ஒரு திட்டத்தை வழங்கிக் கொண்டு இருக்கிறார்கள். இத்திட்டங்கள் முழுமையும் நேரடியாக பொதுமக்களுக்கு சென்று சேர்க்கப்பட்டு வருகின்றது.
கடந்த 10 ஆண்டு ஆட்சிகாலத்தில் இல்லாத அளவிற்கு எல்லா துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது நமது தமிழ்நாடு அரசு. கிராமப்புறங்களில் இருக்கின்ற பகுதிகளுக்கும் சுகாதார வளாகங்கள் கிராமப்புறங்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் தனியார் பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களை விட அரசு பள்ளிகளிலே அதிகமான மாணவர்கள் இந்த ஆண்டு சேர்ந்து பயில்கின்றனர். அவர்களுக்கு தேவைகளுக்கேற்ப மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. எல்லா வகையிலும் எந்தெந்த இடங்களில் என்னென்ன தேவை இருக்கின்றதோ அந்த தேவையை அறிந்து அதற்கேற்ப அரசினுடைய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
நகர்புறங்களில் இருக்கக்கூடிய ஆக்கிரமிப்பு பகுதிகளில் 10 மற்றும் 15 வசிக்கக்கூடிய வீடுகளை அகற்றியபோது, ராஜாக்கூரில் அவர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டன. அந்தப் பகுதியில் வசிக்கக்கூடிய மக்கள் அரசு நிர்ணயித்துள்ள தொகையை செலுத்தினால் அவர்களுக்கும் வீடுகள் வழங்கப்படும். பருவ மழையின் காரணமாக சாலைகள் பழுதடைந்துள்ளன. பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைப்பதற்காக 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணி நடைபெற்று வருகிறது.
மதுரை கிழக்கு தொகுதியில் புதை சாக்கடை பணி நடைபெற்று வரும் நிலையில், மழையின் காரணமாக சாலைகள் சேதமடைந்துள்ளன அவற்றையும் சீரமைக்கும் பணியினை துவக்க உள்ளோம். கிராமப்புறங்களில் பல ஆண்டு காலமாக நியாய விலைக்கடைகள் இல்லாமல் இருந்து பகுதிகளில் எல்லாம் முதற்கட்டமாக 22 கடைகள் கட்டுவதற்கான பணி தொஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நீர்நிலை ஆதாரங்கள் இருக்கக்கூடிய பகுதிகளுக்கு பட்டாக்கள் வழங்கக்கூடாது. பட்டாக்களில் தவறுகள் ஏற்பட்டிருந்தாலும் அவற்றை பதிவு செய்யக்கூடாது என்று பதிவுத்துறையின் தலைவர் பதிவுத்துறை அலுவலர்களுக்கு அறிவிப்பு செய்துள்ளார். வணிகவரித்துறையில் முறைகேடுகள் நடைபெறாமல் இருப்பதற்கு தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றி கொண்டிருப்பவர்களை நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்யபப்ட்டுள்ளனர் என்றார் அமைச்சர் பி.மூர்த்தி.
இந் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்) மு.பூமிநாதன் (மதுரை தெற்கு) மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி, ஊரக வளர்ச்சி முகமை (திட்ட அலுவலர்) அபிதா ஹனீப் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சூரியகலா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்)செல்லத்துரை ஒன்றிய குழுத் தலைவர்கள் வீரராகவன் (மதுரை மேற்கு) மணிமேகலை (மதுரை கிழக்கு) உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu