மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புறக்காவல் நிலையம் திறப்பு

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புறக்காவல் நிலையம் திறப்பு
X

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்த ஆட்சியர் சங்கீதா

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் வாயிற் பகுதி, வெளிபபுற சுற்றுச்சுவர் பகுதிகளில் நவீன கேமரா பொருத்தப் பட்டுள்ளது

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற புறக்காவல் நிலையம்‌ திறப்பு விழாவில் காவல் ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பங்கேற்றனர்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், நவீன வசதிகளுடன் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகததில், புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் தொடர்ந்து பொதுமக்களும அரசு அதிகாரி களும் தொடர்ந்து கோரிக்கை வைத்ததன் அடிப்படையிலும், பொங்கல் பண்டிகைக்கு மக்களுக்கு இலவசமாக வழங்கப் படுவதற்காக கொள்முதல் செய்யப்பட்ட வேட்டி சேலைகள் அடங்கிய பண்டல்கள் திருட்டு போன சம்பவம் மற்றும் கோரிக்கை நிறைவேறுவதற்காக தீக்குளிக்க முயலும் தொடர் சம்பவங்களின் எதிரொலியாக இந்த புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், அலுவலகத்திற்கு வரும் வாயிற் பகுதி, வெளிபபுற சுற்றுச்சுவர் பகுதிகளில் நவீன கேமரா பொருத்தப்பட்டு புறக்காவல் நிலையத்தில் இருந்து கண்காணிக்கும் படி அமைத்துள்ளனர்.இதன் திறப்பு விழாவில்,மாவட்ட ஆட்சியர் சங்கீதா ,மாநாகர காவல் ஆணையாளர் லோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.இந்த நிகழ்ச்சியில், தல்லாக்குளம் காவல் உதவி ஆணையர் சம்பத், காவல் ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் காவலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai based agriculture in india