வரி செலுத்துவோருக்கு புதிய சலுகை: மதுரை மேயர் தகவல்
பைல் படம்
மதுரை மாநகராட்சியில் ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் சொத்துவரி செலுத்தும் உரிமையாளர்களுக்கு ஐந்து சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று மேயர் இந்திராணி பொன்வசந்த் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998-க்கு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு 13.04.2023 முதல் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் விதிகள் 2023 நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998 பிரிவு 84(1)ல்இ அரையாண்டுக்கான சொத்துவரியினை முதல் 30 நாட்களுக்குள் செலுத்தும் உரிமையாளர்களுக்கு 5மூ சதவீதம் ஊக்கத் தொகை அதிகபட்சமாக ரூ.5000 வரை வழங்கப்படும்.
அதன்படி, மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள உரிமையாளர்கள் தங்களது 2023-24 ஆண்டின் முதல் அரையாண்டிற் கான சொத்துவரியினை 2023 ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் செலுத்தும் உரிமையாளர்களுக்கு ஊக்கத்தொகை பெற தகுதியுடையவர் ஆகிறார்கள். எனவே, 2023 ஏப்ரல் 30 தேதிக்குள் சொத்துவரியினை செலுத்தும் உரிமையாளர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும்.
அதன்படி, மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதிகளில் உள்ள உரிமையாளர்களுக்கு குறுந்தகவல் அனுப்புதல், மாநகராட்சி மைய அலுவலகம் மற்றும் ஐந்து மண்டல அலுவலகங்களில் அறிவிப்பு பலகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் பதாகைகள் வைத்தல், ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தல், ரேடியோ, செய்தித்தாள்கள் மற்றும் உள்ளுர் கேபிள் தொலைக்காட்சி வாயிலாக சொத்துவரியினை உரிமையாளர்கள் செலுத்துவதற்கு விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சொத்து உரிமையாளர்கள், சொத்து வரியினை மதுரை மாநகராட்சி அனைத்து வரி வசூல் மையங்கள் மற்றும் இணையதளம் மற்றும் செயலி வாயிலாக வரி செலுத்துவதற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.எனவே, மதுரை மாநகராட்சி 100 வார்டுப் பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியினை 2023 ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் ஊக்கத் தொகையினை பெற்றிடுமாறும், மதுரை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளில் தங்களது பங்களிப்பை வழங்குமாறு மதுரை மாநகராட்சியின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu