அலங்காநல்லுார் புதிய ஜல்லிக்கட்டு மைதானம் 24-ம் தேதி திறப்பு: முதல்வர் பங்கேற்பு
அலங்காநல்லுாரில் கட்டப்பட்டுள்ள புதிய ஜல்லிக்கட்டு மைதானத்தின் முகப்பு தோற்றம் (கோப்பு படம்)
New Jallikattu Playground
மதுரை கீழக்கரை அருகே வருகின்ற 24 ஆம் தேதி முதல்வர் திறந்து வைக்க உள்ள புதிய ஜல்லிக்கட்டு மைதான இறுதி கட்டப் பணிகளை அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மதுரை மாவட்டம்,அலங்காநல்லூர் - கீழக்கரையில் சுமார் 44 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 'கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்' தொடக்க விழா வருகின்ற 24ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ,தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய ஜல்லிக்கட்டு மைதானத்தை திறந்து வைக்க உள்ளார்.
அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், அதன் முன்னேற்பாடு பணிகளை பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது, ஜல்லிக்கட்டு வாடிவாசல் பகுதிகள் பார்வையாளர் மாடம் மற்றும் காளைகள் சென்று சேரும் இடம் பொதுமக்கள் அமரும் இடம் உள்ளிட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu