மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நவராத்திரி விழா: மகிசாசூரமர்த்தினி அலங்காரம்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நவராத்திரி விழா: மகிசாசூரமர்த்தினி அலங்காரம்
X

மீனாட்சியம்மன் மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்தில் காட்சியளித்தார்

இன்று மீனாட்சிஅம்மன் மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்தில் வண்ண மலர்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பலித்தார்

உலக பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 7ம் தேதி அன்று தொடங்கி மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு நாளும் மீனாட்சி அம்மன் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

இன்று கோவில் வளாகத்தில் உள்ள சுவாமி சன்னதியின் 2ஆம் பிரகாரத்தில் அமைக்கப்படும் நவராத்திரி கொலு மண்டபத்தில் மீனாட்சியம்மன் மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்தில் வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நவராத்திரியை முன்னிட்டு கோவிலின் நான்கு கோபுரங்கள் மற்றும் ஆடி வீதிகளில் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!