மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நவராத்திரி விழா

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நவராத்திரி விழா
X
சுவாமி சந்நிதியின் 2ஆம் பிரகாரத்தில் நவராத்திரி கொலு மண்டபத்தில் மீனாட்சியம்மன் சங்கீத சியாமளை திருக்கோலத்தில் காட்சி

நவராத்திரி ஐந்தாம் நாளான இன்று மீனாட்சிஅம்மன் சங்கீத சியாமளை திருக்கோலத்தில் வண்ண மலர்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பலித்தார்

உலக பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த வியாழன் அன்று தொடங்கி மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு நாளும் மீனாட்சி அம்மன் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வரும் நிலையில், 5ம் நாளான இன்று கோவில் வளாகத்தில் உள்ள சுவாமி சந்நிதியின் 2ஆம் பிரகாரத்தில் அமைக்கப்படும் நவராத்திரி கொலு மண்டபத்தில் மீனாட்சியம்மன் சங்கீத சியாமளை திருக்கோலத்தில் வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நவராத்திரியை முன்னிட்டு, கோவிலின் நான்கு கோபுரங்கள் மற்றும் ஆடி வீதிகளில் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!