மதுரையில் பெற்ற மகனை எரித்துக் கொன்ற தாய் தந்தை கைது
மதுரையில் பெற்ற மகனையே எரித்துக் கொன்ற தாய் தந்தையை போலீஸார் கைது செய்தனர்
மதுரை ஆரப்பாளையம் பகுதியில் சாக்கு மூட்டையில் கட்டி எரிக்கப்பட்ட நிலையில் வாலிபர் பிரேதத்தை போலீசார் மீட்டனர். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. மதுரை ஆரப்பாளையம் பகுதியில் முருகேசன், கிருஷ்ணவேணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகன் மணிமாறன் இவர் திருமணம் முடிந்து மனைவியை பிரிந்து தாய் தந்தையுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் வைகை கரையோரம் எரிந்த நிலையில் சடலமாக மணிமாறன் உடல் மீட்கப்பட்டது. அவரது உடலை மீட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் மணிமரன் தினந்தோறும் மது குடித்துவிட்டு தாய் தந்தையிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும், அவரது கொடுமையை தாங்க முடியாத முருகேசன், கிருஷ்ணவேணி சேர்ந்து மணிமாறனை கட்டையால் அடித்து கொலை செய்துள்ளனர். இந்நிலையில் கொலை செய்த பின்னர் அவரது உடலை துணியால் கட்டி சைக்கிளில் வைத்து சென்று வைகை நதிக்கரையில் தீயிட்டு எரித்துள்ளனர்.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தம்பதியினரை போலீசார் கைது செய்தனர். தம்பதியனரை விசாரணை மேற்கொண்டதில் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டதன் அடிப்படையில் கிருஷ்ணவேணி, முருகேசன் தம்பதியினரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu