இந்தியாவின், அடுத்த பிரதமரும் மோடி தான்: தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை பேட்டி

மதுரையில் நடைபெற்ற மத்தியில் பா.ஜ அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் தமிழக பா,ஜ தலைவர் அண்ணாமலைக்கு அணிவிக்கப்பட்ட ஆளுயர மாலை.
Annamalai BJP -மதுரையில், மத்திய பா.ஜக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது:
தமிழகத்தில் தி.மு.க ஆட்சியில் பல்வேறு கட்டங்களில் முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. மாநில அரசின் பல துறைகளில் லஞ்சம் பெருகி வருகிறது. இதை தடுக்க பாரதிய ஜனதா கட்சி போராடி வருகிறது.பொங்கல் தொகுப்பு முதல் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் வரையிலான திட்டங்களில் தவறுகள் நடக்கிறது.
இதனை பா.ஜ. நிர்வாகிகள் சுட்டிக்காட்டினால், தி.மு.க அமைச்சர்களுக்கு கோபம் வருகிறது. மதுரை ஆதீனத்தை பொருத்தவரை, அவர் மக்கள் சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார் . மக்கள் சேவையில் யார் ஈடுபட்டாலும், அவரை ஆதரிப்பது பா.ஜ.,வின் கடமையாகும். அந்த நிலையில்தான் மதுரை ஆதீனத்தை பா.ஜ.ஆதரிக்கிறது.மதுரை ஆதீனம் பாஜக உறுப்பினர் அல்ல .
அவர் மீது தி.மு.க அரசு கைவைத்தால் அவர்களை மதுரை மக்கள் பார்த்துக் கொள்வார்கள். இன்றைக்கு நடக்கும் இந்த மதுரை பொதுக்கூட்டம், பா.ஜ., கட்சிக்கு ஒரு திருப்புமுனையாக அமையும். இவ்வாறு, தமிழக பா.ஜ தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டார்.இந்த கூட்டத்தில், பா.ஜ., மாவட்ட நிர்வாகி டாக்டர் சரவணன், கந்திலி நரசிங்கப் பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu