மதுரையில், மண்டல மாநாடு: அமைச்சர்கள் பங்கேற்பு

மதுரையில், மண்டல மாநாடு: அமைச்சர்கள் பங்கேற்பு
X
மதுரையில், மண்டல மாநாடு: அமைச்சர்கள் பங்கேற்றனர்.

மதுரையில் மண்டல மாநாடு:

மதுரை:

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் மதுரை மாவட்டம், ஒத்தக்கடை வேலம்மாள் குளோபல் மருத்துவமனை வளாகத்தில், பள்ளிக் கல்வித்துறை , தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்தும் பெற்றோர்களை கொண்டாடுவோம் முதல் மண்டல மாநாட்டு நிகழ்ச்சியை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து, பள்ளிகளுக்கு நன்கொடை வழங்கியவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவித்து உரையாற்றினார்கள்.


பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.செள. சங்கிதா, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன் , மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன், மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மதுரையில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று உரையாற்றினார்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு