ஒலிம்பிக் போட்டி பதக்கம் பெற்ற மாணவிக்கு அமைச்சர் பரிசு

ஒலிம்பிக் போட்டி பதக்கம் பெற்ற மாணவிக்கு அமைச்சர் பரிசு
X

ஒலிம்பிக் போட்டி பதக்கம் வென்ற மாணவிக்கு அமைச்சர் மூர்த்தி பரிசளித்தார்.

மாணவி 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுதவும் தேவையான நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்

ஒலிம்பிக் போட்டி பதக்கம் வென்ற மாணவிக்கு அமைச்சர் மூர்த்தி பரிசளித்தார்.

பிரேசில் நாட்டில் நடைபெற்ற செவித்திறன் மாற்றுத் திறனாளிகளுக்கான 2022 -ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் இறகுபந்து போட்டியில் ஒற்றையர் , கலப்பு இரட்டையர் மற்றும் குழு போட்டி ஆகிய மூன்று பிரிவுகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்ற மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த, மதுரை மாநகராட்சி அவ்வை மேல்நிலைப்பள்ளி 12 -ஆம் வகுப்பு மாணவி ஜெர்லின் அனிகாவை வணிகவரி மற்றும் பத்திரப் பதிவு துறை அமைச்சர் பி. மூர்த்தி நேரில் அழைத்து பாராட்டியதுடன், ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை ஊக்கத்தொகையாக வழங்கினார்.

தங்கப்பதக்கம் வென்ற ஜெர்லின் அனிகாவை தமிழக முதல்வர் நேரில் சந்திக்க ஏற்பாடு செய்ததுடன், மாணவி 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுதவும் தேவையான நடவடிக்கை எடுப்பதாகவும் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.

Tags

Next Story
ai based agriculture in india