போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் பரிசளிப்பு
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசளித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
மதுரை மாநகராட்சி சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பாராட்டி கேடயம் மற்றும் சான்றிதழ்களை அமைச்சர் வழங்கினார்.
டாக்டர் கருணாநிதி , நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மாநகராட்சி பள்ளிகளில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி கேடயம் மற்றும் சான்றிதழ்களை , மேயர் இந்திராணி பொன்வசந்த் , மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, ஆணையாளர் கே.ஜே.பிரவீன்குமார் ஆகியோர் முன்னிலையில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் (14.08.2023) வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர், உத்தரவின்படி, முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா, மதுரை மாநகர் பகுதிகளில் தொடர்ந்து சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு நிகழ்வாக , உலக சாதனையை நோக்கி மதுரை மாநகராட்சியில் பணிபுரியும் 2752 தூய்மை பணியாளர்களை கொண்டு 1 மணி நேரம் 20 நிமிடத்தில் கருணாநிதியின் மாபெரும் உருவத்தை வடிவமைத்து உலக சாதனை ”டிரம்ப் புத்தகத்தில்” இடம் பெற்றுள்ளது. மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்களிடையே கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டி வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. போட்டிகள் முதலில் பள்ளி அளவில் நடத்தப்பட்டு ஒவ்வொரு பள்ளியிலும் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற 180 மாணவ, மாணவிகள் ஐந்து மண்டலங்களிலும் மண்டல அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கு பெற்றனர்.
மதுரை மாநகராட்சி 27 நடுநிலைப்பள்ளிகள், 24 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளை நடத்துவதற்கு ஒருங்கிணைப் பாளர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டு மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டிகள் நடைபெற்றது.
இந்த பேச்சுப்போட்டியில், 6 ஆம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரை பயிலும் 89 மாணவ, மாணவிகள், 9 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு பயிலும் 40 மாணவ, மாணவிகள்,11 ஆம் வகுப்பு மற்றும் 12 வகுப்பு பயிலும் 23 மாணவ, மாணவிகள் என மொத்தம் 152 மாணவமாணவிகள் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டனர்.
மதுரை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக் கிடையே நடைபெற்ற பேச்சு போட்டியில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பெற்ற 43 மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்வில், பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், முன்னாள் முதல்வர் தியாகராசர் கல்லூரி பேராசிரியர் இரா.இராஜா கோவிந்தசாமி,துணை ஆணையாளர் சரவணன் ,துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர்கள் சரவணபுவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ்சர்மா, கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர்கள் சாலிதளபதி ,மகேஸ்வரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கா.கார்த்திகா, மாநகராட்சி கல்வி அலுவலர் நாகேந்திரன், மாமன்ற உறுப்பினர் முருகன், ஒருங்கிணைப்பாளர் சண்முகதிருக்குமரன், ஆசிரியர்கள், மாநகராட்சி அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu