மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் 24 திட்டப் பணிகள்: அமைச்சர் தொடங்கி வைத்தார்

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் 24 திட்டப் பணிகள்: அமைச்சர் தொடங்கி வைத்தார்
X

திருமோகூர் கிராமத்தில்  மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான தொழிற்கூடம் கட்டடத்தை திறந்து வைத்த அமைச்சர் மூர்த்தி

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரித்திடவும், 100 சதவிகிதம் தேர்ச்சி என்ற இலக்கை எட்ட ஆசிரியர்கள் அயராது உழைத்திட வேண்டும் என அமைச்சர் பி.மூர்த்தி அறிவுரை வழங்கினார்.

மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கிராம சாலைகள் என , ரூபாய் 3 கோடியே 17 இலட்சத்து 23 ஆயிரம் மதிப்பீட்டில் 24 வளர்ச்சி திட்ட பணிகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார்.

மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி இன்றைய தினம் காலை 7.00 மணி தொடங்கி மாலை 6.00 மணி வரையில் பல்வேறு கிராமங்களுக்கு நேரடியாக சென்று முடிவற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்து, பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்தம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் மாங்குளம் கிராமத்தில் ரூ.7 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கிராமச்சாவடி கட்டடத்தை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். மேலும், சின்ன மாங்குளம் கிராமத்தில் முதலமைச்சரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.44 இலட்சம் மதிப்பீட்டில் சின்ன மாங்குளம் முதல் பஞ்சந்தாங்கிபட்டி சாலை அமைப்பதற்கான பணிகளை தொடங்கி வைத்தார்.

அதன் பின்னர் மாத்தூர் ஊராட்சியில், காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ 10.19 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தையும், வெள்ளியங்குன்றம் கிராமத்தில் ரூ 14.59 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள உணவு தானிய சேமிப்பு கிடங்கு கட்டடத்தையும், அரும்பனூர் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 7 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிழற்குடையையும் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

அதன்பின்பு , தாமரைப்பட்டி ஊராட்சியில் உள்ள காயாம்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 6 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நாடக மேடை கட்டடத்தையும், கொடிக்குளம் கிராமத்தில் ரூபாய் 7 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையையும், திருமோகூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூபாய் 9.60 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான தொழிற்கூடம் கட்டடத்தையும், இராஜாக்கூர் ஊராட்சி முண்டநாயகம் கிராமத்தில் ரூபாய் 6 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நாடகமேடை கட்டடத்தையும் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

மேலும், வரிச்சியூர் ஊராட்சியில் உறங்கான்பட்டி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூபாய் 9.13 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலைக் கடை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூபாய் 10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கான சுற்றுச்சுவர்இ ரூபாய் 6 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கிராமச் சாவடி கட்டடம்இ தலா ரூபாய் 6 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட உறங்கான்பட்டி மற்றும் வரிச்சியூர் கிராமத்தில் பயணியர் நிழற்குடைகள், கருப்புக்கால் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூபாய் 14.59 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய உணவு தானியம் சேமிப்புக் கிடங்கு, ரூபாய் 50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வரிச்சியூர் அரசு உயர்நிலைப்பள்ளிக்கான சுற்றுச்சுவர் ஆகியவற்றையும் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, களிமங்கலம் ஊராட்சியில் நாட்டார்மங்களம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூபாய் 14.59 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய உணவு தானியம் சேமிப்புக் கிடங்கு, குன்னத்தூர் கிராமத்தில் ரூபாய் 6 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையையும், சக்குடி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூபாய் 10.93 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையக் கட்டடம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் தலா ரூபாய் 14.59 இலட்சம் மதிப்பீட்டில் கார்சேரி மற்றும் சக்குடி கிராமங்களில் கட்டப்பட்ட புதிய உணவு தானியம் சேமிப்புக் கிடங்குகள், சக்கிமங்கலம் கிராமத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ரூபாய் 18.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 6000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, கருப்பாயூரணி கிராமத்தில் மாவட்ட ஊராட்சி நிதியிலிருந்து ரூபாய் 14 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கிராமச்சாவடி கட்டடம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூபாய் 10.93 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கருப்பாயூரணி புதிய அங்கன்வாடி மையக் கட்டடம் ஆகியவற்றையும் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

அந்த வகையில், அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் ரூபாய் 3 கோடியே 17 இலட்சத்து 23 ஆயிரம் மதிப்பீட்டில் 24 வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.


மேலும், அமைச்சர் ஒவ்வொரு கிராமத்திலும் பொது மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். குறிப்பாக, மாங்குளம், மாத்தூர் ஆகிய கிராமப் பகுதியிலுள்ள பொதுமக்கள் தங்கள் கிராமங்களில் கூடுதலாக குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர், மேற்குறிப்பிட்ட கிராமப் பகுதிகளில் ஆழ்துளை கிணறு அமைத்து சீரான குடிநீர் விநியோகம் வழங்கிட ஏதுவாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஊரக வளர்ச்சித்துறை உதவிப் பொறியாளரிடத்தில் உத்தரவிட்டார்.

தொடர்ந்து, வரிச்சியூர் ஊராட்சியில் உள்ள உறங்கான்பட்டி கிராமத்தில் அரசு பள்ளி சுற்றுச் சுவரை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து பள்ளியில் ஆய்வு மேற்கொண்டபோது பள்ளியின் தேர்ச்சி விகிதம் மற்றும் மாணவர் சேர்க்கை விகிதம் குறித்து கேட்டறிந்தார். தமிழ்நாடு அரசு குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாணவ, மாணவியர்களின் நலனை கருத்திற்கொண்டு பள்ளிகளுக்கான உட்கட்டமைப்புகளை தொடர்ந்து மேம்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள் தங்களது பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரித்திடவும், 100 சதவிகிதம் மாணவர் தேர்ச்சி என்ற நிலையை தொடர்ந்து எய்திடவும் பணியாற்றிட வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும், கார்சேரி கிராமம், கிழக்குத் தெரு பகுதியிலுள்ள பொதுமக்கள் தங்களது குடியிருப்புகளுக்கு பட்டா ஆணை வழங்கிட வேண்டும் என, கோரிக்கை வைத்தார்கள். இது தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்டு தகுதியான பயனாளிகளுக்கு உடனடியாக பட்டா ஆணை வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வருவாய் கோட்டாட்சியரிடத்தில் அறிவுறுத்தினார்.

மேலும், பொதுமக்கள் வழங்கியுள்ள கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு உடனடி தீர்வுகாண அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதேபோல, பொதுமக்களுக்கு அடிப்படை அத்தியாவசிய தேவையான குடிநீர் விநியோகம், மின்சார வசதி, தெருவிளக்கு வசதி, சாலை வசதி போன்ற திட்டப்பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி பணியாற்றிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்வுகளின் போது, மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சரவணன், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட வருவாய் தலைவர் சக்திவேல் , மாவட்ட ஊராட்சித் தலைவர் சூரியகலா கலாநிதி, கிழக்கு ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மணிமேகலை மற்றும் அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil