மதுரையில் மருத்துவ ரோபோக்கள் மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை

மதுரையில் மருத்துவ ரோபோக்கள் மூலம் நோயாளிகளுக்கு  சிகிச்சை
X
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் மருத்துவ ரோபோக்கள் மூலம் 40 -ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் மருத்துவ ரோபோக்கள் மூலம் 40 -ஆயிரம் பேருக்கு தொலைதுாரத்திலிருந்தே சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த மருத்துவமனை தலைவர் டாக்டர் குருசங்கர் கூறியதாவது : கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த போது மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில் 16 'டெலடாக் ஹெல்த் விட்டா' ரோபோக்கள் மூலம் 40 ஆயிரம் உள், வெளிநோயாளிகளுக்கு தொலைதுாரத்திலிருந்தே சிகிச்சை அளிக்கப்பட்டது. : இங்கு கொரோனா நோயாளிகளுக்கு 250 படுக்கைகள் இருந்தபோதிலும் டாக்டர்கள் குறைவாக இருந்ததால் மருத்துவ ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

தொலை துாரத்திலிருந்தே நோயறிதல் மற்றும் நோயாளிகளின் உடல்சார் அளவுகளை கண்காணித்து கொரோனா பரவலை தடுக்க இந்த தொழில்நுட்பம் உதவியது. இந்த ரோபோக்கள் எந்த இடத்தில் இருந்தாலும் எந்த நேரத்திலும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் டாக்டர்களின் மூன்றாவது கண்ணாக செயல்பட்டது. கேத்லேப், எக்கோ போன்ற மருத்துவ கருவிகளுடன் இந்த ரோபோக்களை ஒருங்கிணைத்துள்ளதால், நோயறிதல் சோதனை, ஸ்கேன்கள் அறிக்கைகளை டாக்டர்கள் எடுத்து பரிசீலிக்க இயலும். தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் இந்த ரோபோக்களை பயன்படுத்தி நோயாளியின் உறவினர்கள் அவர்களை கண்காணிக்க முடியும் அவர்.

டெலடாக் ஹெல்த் யு.எஸ் நிறுவன முதுநிலை துணைத்தலைவர் டாக்டர் ஷயான் வியாஸ் கூறுகையில், இந்த ரோபோக்கள் டாக்டர்களின் செயல்திறன் மற்றும் சுதந்திரத்தை அதிகரிப்பதோடு டாக்டர், நோயாளிகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துகிறது. டாக்டர்கள் பாதுகாப்பு சாதனங்கள் அணியாமல் நோயாளிகளை பராமரிக்க உதவுகிறது என்றார்.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!