மதுரையில் மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை பார்வையிட்ட மேயர்
மதுரை மாநகராட்சி மழையினால் சேதமடைந்து சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் மேயர் இந்திராணி பொன்வசந்த் உத்தரவிட்டார்.
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை மற்றும் சுற்றுச்சூழல் பூங்காவில் மழையினால் விழுந்த மரங்களை உடனடியாக அகற்றுவது குறித்து, மேயர் இந்திராணி பொன்வசந்த் இன்று (10.05.2023) ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சி சித்திரை திருவிழா தொடக்கநாள் முதல் மதுரை மாநகரில் மழை தொடர்ந்து பெய்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக, நேற்று மாலை மதுரை தல்லாகுளம், மாட்டுத்தாவணி, தமுக்கம் , கோரிப்பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் அதிக காற்று வீசியும் மழையும் அதிகளவில் பெய்துள்ளது.
இந்த புயல் காற்றினால், மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை வளாகம், மாநகராட்சி சுற்றுச்சூழல் பூங்கா மற்றும் உலக தமிழ்சங்கம் அருகில் உள்ள மாநகராட்சி நீச்சல் குளம் வளாகத்தில் உள்ள பழமை வாய்ந்த மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. அதனை உடனடியாக மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் பணியாளர்கள் கொண்டு இரவோடு இரவாக அகற்றப்பட்டது.
இன்று (10.05.2023) மேயர் , அறிஞர் அண்ணா மாளிகை வளாகம், மேயர் பாலம் மற்றும் சுற்றுச்சூழல் பூங்கா ஆகிய பகுதிகளில் மழை மற்றும் புயல் காற்றினால் வேரோடு சாய்ந்த விழுந்த மரங்களின் இடத்தை பார்வையிட்டு, தேவையான மரஅரவை இயந்திரங்கள் மற்றும் கூடுதல் பணியாளர்களை கொண்டு அகற்றுமாறும், மின்சார வயர்களை மிகுந்த பாதுகாப்புடன் கையாண்டு அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.
மேயர், மண்டலம் 3 வார்டு எண்.75 வெங்கடாஜலபுரம் பகுதியில், புதியதாக பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருவதால், அப்பகுதி பொதுமக்கள் இடையூறின்றி போக்குவரத்து மேற்கொள்ள மாற்று சாலையை சீரமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வில், மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, நகரப்பொறியாளர் அரசு, உதவி செயற்பொறியாளர்கள் காமராஜ், சேகர், உதவிப்பொறியாளர் பொன்மணி, ஜெயா , சுகாதார அலுவலர் வீரன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu