மதுரை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு மேயர் பாராட்டு

மதுரை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு மேயர் பாராட்டு
X

கனவு ஆசிரியர் விருது பெற்ற மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு மேயர் இந்திராணி பொன்வசந்த் பாராட்டு தெரிவித்தார்

கனவு ஆசிரியர் விருது பெற்ற மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு மேயர் இந்திராணி பொன்வசந்த் பாராட்டு தெரிவித்தார்

மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில், பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் கனவு ஆசிரியர் விருது பெற்ற மாநகராட்சி ஆசிரியர்களுக்கு, மேயர் இந்திராணி பொன்வசந்த் பாராட்டு தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக பணியாற்றிய தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை பாராட்டும் வகையில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ,

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் 2023-24 ஆண்டிற்கான கனவு ஆசிரியர் விருது வழங்கும் விழா பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், தலைமையில் 19.12.2023 (செவ்வாய்கிழமை) அன்று நாமக்கல் விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. தமிழ்நாடு அளவில் 379 ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டத்தில், மட்டும் 17 ஆசிரியர்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். அதில் , மதுரை மாநகராட்சி வெள்ளிவீதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதுநிலை ஆசிரியை ஸ்டெல்லா ஜெயசீலி, பட்டதாரி ஆசிரியை ரிஸ்வானா மற்றும் செல்லூர் கட்டபொம்மன் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி சுகன்யாதேவி , கனவு ஆசிரியர் விருது வழங்கப்பட்டது. கனவு ஆசிரியர் விருது பெற்ற மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு மேயர் இந்திராணி பொன்வசந்த் வாழ்த்தினார். அப்பொழுது ஆசிரியர்கள் தாங்கள் பெற்ற விருதுகளை காண்பித்து வாழ்த்துகளை பெற்றனர்.இந்நிகழ்வில், கல்வி அலுவலர் மாரிமுத்து, பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!