மதுரை மாநகராட்சியில் மாஸ்கிளீனிங் பணி: மேயர் ஆய்வு

மதுரை மாநகராட்சியில் மாஸ்கிளீனிங் பணி: மேயர் ஆய்வு
X

மதுரையில் நடைபெற்ர மாஸ் கிளீனிங் பணியை பார்வையிட்ட மாநகராட்சி மேயர் இந்திராணிபொன்வசந்த்

மருந்து அடித்தல், வாய்க்கால்கள் தூhர்வாருதல் போன்ற பல்வேறு தூய்மைப் பணிகள் சிறப்பு தூய்மைப் பணியின் மூலம் மேற்கொள்ளப்பட்டது.

சிறப்பு தூய்மை(மாஸ்கிளீனிங்) பணி மேயர் வ.இந்திராணி பொன்வசந்த் துவக்கி வைத்தார்.

மதுரை மாநகராட்சி மண்டலம் 3 வார்டு, எண்.57 ஆரப்பாளையம் மந்தை திடல் பகுதியில் சிறப்பு தூய்மை பணியினை, மேயர் வ.இந்திராணி பொன்வசந்த் துவக்கி வைத்து பார்வையிட்டார். மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாநகராட்சி பள்ளிக்கூடங்கள், சாலைகள், தெருக்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தூய்மைப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த வாரம் மண்டலம் 4 வார்டு எண்.43 முனிச்சாலை பகுதியில் சிறப்பு தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது.அதன் தொடர்ச்சியாக, மண்டலம் 3 வார்டு எண்.57 ஆரப்பாளையம் மந்தை திடலில் சிறப்பு தூய்மைப் பணியினை, மேயர் அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார்.

இந்த சிறப்பு தூய்மைப்பணிகள் ஆரப்பாளையம் மந்தை திடல் பகுதி, வேளாளர் தெரு, பிள்ளைமார் தெரு, சோனையார் கோவில் தெரு. ஆரப்பாளையம் மெயின் ரோடு. டி.டி.ரோடு, ஆரப்பாளையம் பேருந்து நிலையம், புது ஜெயில் ரோடு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் பகுதிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இப்பணியில், சுமார் 86 தூய்மை பணியாளர்கள், 15 கொசு ஒழிப்பு பணியாளர்கள், 30 பொறியியல் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.மேலும், இப்பணியில் 4 கொசு ஒழிப்பு புகைப்பரப்பும் இயந்திரம், 2 ஆட்டோ கொசு புகைப்பரப்பும் வாகனம், 2 ஜே.சி.பி. இயந்திரம், 2 ரோபோ வாகனம், 1 கழிவுநீர் உறிஞ்சு வாகனம், 2 மண் அள்ளும் இயந்திரங்கள், 4 பேட்டரி வாகனங்கள், 5 தூய்மைப்பணி இலகுரக வாகனங்கள், 2 டிராக்டர்கள்;, 4 டிரை சைக்கிள்கள் உள்ளிட்ட தூய்மை வாகனங்கள் சிறப்பு தூய்மைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இப்பணியின் மூலம் ஒவ்வொரு வீடு வீடாக மக்கும் குப்பைகள் மற்றும் மட்காத குப்பைகளை தரம் பிரித்து வாங்குதல், தெருக்களை கூட்டி சுத்தம் செய்தல், முக்கிய பிரதான சாலைகளில் தேங்கியுள்ள மணல்களை அள்ளுதல், தேவையற்ற குப்பைகளை அகற்றுதல், டெங்கு கொசு புழு உற்பத்தியாகும் இடங்களில் புகை மருந்து அடித்தல், வாய்க்கால்கள் தூhர்வாருதல் போன்ற பல்வேறு தூய்மைப் பணிகள் சிறப்பு தூய்மைப் பணியின் மூலம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர்கள் பாண்டிச்செல்வி, வாசுகி, சரவணபுவனேஸ்வரி, சுவிதா, நகரப்பொறியாளர் லெட்சுமணன், உதவி ஆணையாளர் மனோகரன், உதவி செயற்பொறியாளர் அய்யப்பன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், சுகாதார அலுவலர் வீரன், உதவிப் பொறியாளர் கனி, சுகாதார ஆய்வாளர்கள் ரமேஷ், கவிதா உட்பட மாநகராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!