மதுரை அருகே குடிநீர் லாரியில் ஆனந்தக் குளியல்: கண்டு கொள்ளுமா மாநகராட்சி?

மதுரை அருகே குடிநீர் லாரியில் ஆனந்தக் குளியல்: கண்டு கொள்ளுமா மாநகராட்சி?
X

குடிநீர் லாரியில் குளியல் போடும் வாலிபர்

மாநகராட்சி குடிநீர் லாரியில் இருந்து நீரை திறந்துவிட்டு மர்ம நபர் குளியல் போடும் காட்சிகள் சமூகவலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது:

மதுரையில் உள்ள 100 வார்டுகளுக்கு மாநகராட்சி மூலம் குடிநீர் விநியோகம் குழாய்களில் செய்யப்படுகிறது. மேலும், குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் லாரி, டிராக்டர் மூலம் விநியோகம் செய்கிறது. இதற்காக, மதுரை மாநகரில் அரசரடி, கோச்சடை, தெப்பக்குளம், மேகநந்தல், மங்களக்குடி, பாண்டிகோயில், உத்தங்குடி, மருதங்குளம் ஆகிய பகுதிகளில் இருந்து குடிநீர் லாரிகள் மூலம் பிடித்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், மதுரை கோச்சடை பகுதியில் உள்ள குடிநீர் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரியில் இருந்து தண்ணீரை திறந்துவிட்டு மர்ம நபர் ஒருவர் உல்லாசமாக குளியலில் ஈடுபட்ட வரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும், கோச்சடை பகுதியில் செயல்பட்டு வரும் குடிநீர் நிலையத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருவதாகவும், பாதுகாப்பற்ற முறையில் பராமரிக்கப் படுவதால், இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுவதால் குடிநீரின் வீணாகும் சூழல் உருவாகி உள்ளதாகவும், இதுபோன்று குடிநீரை வீணாக்கப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்..

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!