மதுரையில் அரசு பஸ் ஓட்டுனரை தலைக்கவசத்தால் தாக்கியவர் கைது

மதுரையில் அரசு பஸ் ஓட்டுனரை தலைக்கவசத்தால் தாக்கியவர் கைது
X

பைல் படம்

மதுரையில் பல்வேறு குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய 6 பேரை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்

அரசு டவுன் பஸ் ஓட்டுனரை தலைகவசத்தால் தாக்கிய வாலிபர் கைது

மதுரை, திருமங்கலம் பகத்சிங் தெருவை சேர்ந்தவர் சின்னக்காளை( 53.). இவர் அரசு பஸ் ஓட்டுனர் ஆவார். சம்பவத்தன்று இவர பெரியார் நோக்கி பஸ்ஸை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து பைக்கில் வந்த வாலிபர் பஸ்ஸின் முன்பாக பைக்கை நிறுத்தி வழிமறித்தார். டிரைவருடன் அவர் தகராறில் ஈடுபட்டார் .இதை டிரைவர் தட்டி கேட்டபோது ஆத்திரமடைந்த வாலிபர் பஸ்ஸுக்குள் ஏறினார்.பின்னர் அவர் உள்ளே சென்று டிரைவரை சரமாரியாக ஹெல்மெட்டால் தாக்கினார். இந்த தாக்குதல் குறித்து டிரைவர் சின்னக்காளை தெற்கு வாசல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தாக்கிய வாலிபர் மேலவாசலைச் சேர்ந்த தங்கம் மகன் தங்கப்பெருமாள் 36 என்பவரை கைது செய்தனர்.

பைக்காராவில் முன் விரோதத்தில் கோஷ்டி மோதல்: ஐந்து பேர் கைது

மதுரைபைக்காராவில் முன் விரோதத்தில் இரண்டு கோஷ்டிகள் மோதிக்கொண்டதில் ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.பைக்காரா முத்துராமலிங்கபுரம் மெயின் வீதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் .அதே பகுதியைச் சேர்ந்தவர் சிவமுருகன். இவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் ஆபாசமா கபேசி தாக்கிக் கொண்டனர்.இந்த மோதல் குறித்து ரஞ்சித்குமார் மனைவி யோகா கொடுத்த புகாரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர்கள் ரஞ்சித் குமாரை தாக்கிய சிவமுருகன்(36,) பால்பாண்டி(31,) சரவணன்(43 )ஆகியோரை கைது செய்தனர். இந்த மோதல் தொடர்பாக அன்னபூர்ணம் என்பவர் கொடுத்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ரஞ்சித் குமார்(21) ,சிவன்ராஜா(21) விஷ்வா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து ரஞ்சித்குமார், சிவன்ராஜா ஆகிய இருவரையும் கைது செய்தனர் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எஸ். எஸ். காலனியில் தனியார் நிறுவன பெண் அதிகாரி தூக்கு போட்டு தற்கொலை

மதுரை எஸ் எஸ் காலனி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சையது காதர் மகள் அஸ்மா(22 ).இவர் தனியார் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். சில நாட்களாக இவர் மன அழுத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அஸ்மாவின் தந்தை சையது காத.ர் எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பாலையில் கண்மாயில் மூழ்கி பெண் சாவு

மதுரை, திருப்பாலை முல்லை நகர் கண்ணப்பர் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் பாண்டியன். இவரது மனைவி திலகவதி (42 ). இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வாழ்ந்து வந்தார். பின்னர் இவருடைய பெற்றோர் அவரை சமாதானம் செய்து கணவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் திடீரென்று திருப்பாலை கன்மாயில் தண்ணீரில் மூழ்கி திலகவதி உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்த திருப்பாலை போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து அவர் தண்ணீர் மூழ்கி உயிரிழந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags

Next Story
தேர்வில் அதிக மதிப்பெண் பெற குழந்தைகளுக்கு மனஅழுத்தம் ஏற்படுத்தக்கூடாது: பெற்றோர்களுக்கு கலெக்டர் அறிவுரை!