மதுரை விரகனூர் வைகை ஆற்று பாலம் 4 ஆண்டுகளில் இரண்டாவதாக முறையாக சீரமைப்பு
மதுரை விரகனூர் வைகை ஆற்றுப்பாலத்தில் இரண்டாவது முறையாக சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.
நான்கு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக சேதம் அடைந்தததால் சீரமைப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
மதுரை மாநகர் மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அருகே மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் இருந்து கப்பலூர் சுங்கச்சாவடி இணைப்பு சாலை வரை சுமார் 29 கிலோமீட்டர் தூரத்திற்கு தமிழ்நாடு சாலை உள் கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் சார்பாக 2 வழி சாலையாக இருந்த இந்த பகுதி நான்கு வழிச்சாலையாக விரிவு படுத்தப்பட்டது.
கடந்த 2017 ஆம் ஆண்டு சுமார் 213.69 கோடி ரூபாய் மதிப்பில் துவங்கப்பட்ட இந்த விரிவாக்க பணி கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தது. 28 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த சாலையில் வண்டியூர் சிந்தாமணி வளையங்குளம் உள்ளிட்ட மூன்று இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக் கப்பட்டு டோல் பணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வைகைஆற்றை கடக்கும் வகையில் புதியதாக மேம்பாலம் அமைக்கப்பட்ட நிலையில் அந்த மேம்பாலம் தரமற்ற முறையில் அமைக் கப்பட்டுள்ளதால், கடந்த நான்கு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக தற்போது சேதம் ஏற்பட்டுள்ளது. பாலத்தின் மையப்பகுதியில் உள்ள இரும்பு கம்பிகள் வெளியே தெரிவதன் காரணமாக தற்போது கம்பிகளை அகற்றிவிட்டு புதிய கம்பிகள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும்பாலம் அதிக அளவு அதிர்வு ஏற்படுவதால் பாலத்தில் செல்லக்கூடிய வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. 213 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட சாலை விரிவாக்கபணி தரமற்ற முறையில் கட்டப்பட்ட பாலத்தால் அந்த வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் அச்சத்தில் கடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu