மதுரையில் ரயில் தீ விபத்து சம்பவம்: 5 பேர் கைது
மதுரையில் தீப்பிடித்து எரிந்த ரயில் பெட்டி
மதுரை ரயில் பெட்டி தீ விபத்து தொடர்பாக உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த டிராவல்ஸ் நிறுவன ஊழியர்கள் இருவர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளுக்கான ரயில் பெட்டி, மதுரை ரயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் அதிகாலை இந்த ரயில் பெட்டியில் சிலிண்டரை பயன்படுத்தி தேநீர் தயாரிக்க சிலர் முயன்ற போது தீ விபத்து ஏற்பட்டது. இதில், 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இரண்டாவது நாளாக ரயில்வே காவல்துறை தடவியல் நிபுணர்கள் குழுவினர் நேரில் சென்று ரயில் பெட்டியில் ஆய்வு நடத்தினர். அப்போது, வெடித்து சிதறிய சிலிண்டரின் பாகங்களை கைப்பற்றிய அவர்கள், ரயில் பெட்டிகளில் இருந்து, கட்டு கட்டாக எரிந்த நிலையில் இருந்த ஒரு லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை கைப்பற்றினர்.
இதனிடையே, தீ விபத்தில் சிக்கி, மதுரை ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பயணிகள் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டவர்களிடம் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் டி.எம். சௌத்ரி விசாரணை மேற்கொண்டார். நேற்றும் அவர் தொடர்ந்து விசாரணை நடத்தினார். இந்நிலையில் தீ விபத்தை நேரில் பார்த்தவர்கள் அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்தால், பாதுகாப்பு ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தீ விபத்து தொடர்பாக உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த இரு ஊழியர்கள் உள்பட 5 ஐந்து பேரை காவல்துறை கைது செய்துள்ளது. இவர்கள் மீது 304, 285, 164 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu