மதுரையில் பலத்த மழை:வீடுகளில் கிறிதுமால் நதிநீர் புகும் அபாயம்

மதுரையில் பலத்த மழை:வீடுகளில் கிறிதுமால் நதிநீர் புகும் அபாயம்
X

மதுரை எல்லீஸ் நகரில் உள்ள கிறிதுமால் நதியில், மழைநீர் பெருக்கெடுத்து, குடியிருப்புகளை நோக்கி செல்கிறது. 

மதுரையில் பலத்த மழை பெய்துள்ள நிலையில், வீடுகளுக்குள் கிறிதுமால் நதிநீர் புகும் அபாயம் உள்ளது; மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுரையில் மழை பெய்துள்ளது. தொடர் மழையால் பழைய வார்டு 17, புதிய வார்டு 60, கடைசி பஸ் டாப் எல்லீஸ் நகர் பகுதியில், கிருல்மா நதி நிரம்பி உள்ளது. மேலும், நிரம்பிய நீர், தெருக்களில் பாய்ந்து, குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. மேலும், வீட்டிற்குள் வெள்ளம் செல்லும் அபாயம் உள்ளது.

எனவே, மதுரை மாநகராட்சி அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு, கிறிதுமால் நதி நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இப்பகுதி குடியிருப்போர் எதிர்பார்கின்றனர்.

இதேபோல், மதுரை வண்டியூர், சௌராஷ்டிராபுரம் 5_வது தெருவில் மழையால், தெருக்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இப்பிரச்சனைக்கும் அதிகாரிகள் தீர்வினை ஏற்படுத்த வேண்டும் என்று, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!