மதுரையில் கனமழை - குளம் போல மாறிய சாலைகளால் மக்கள் அவதி

மதுரையில் கனமழை - குளம் போல மாறிய சாலைகளால் மக்கள் அவதி
X
மதுரையில் கனமழை பெய்துள்ள நிலையில், குளம் போல மாறிய சாலைகளால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

மதுரை நகரில் இன்று பலத்த மழை பெய்துள்ளது. இந்த மழையால் சாலைகள் பலவும் குளம் போல காட்சியளிக்கின்றன. சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால், பாதசாரிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக மதுரை கோமதிபுரம் தாழை வீதி, ஜூப்பிலி டவுன், மேலமடை தாசில்தார் வீரவாஞ்சி வீதி, அன்புமலர், சௌபாக்யா தெருக்களில், சாக்கடை நீருடன், மழைநீரும் சேர்ந்து தெருக்களில் பெருக்கெடுத்து ஓடியது.

இதேபோல, மதுரை- சிவகங்கை ரோடு, பி.சி. பெருங்காயம் அருகே சாலையில், மழைநீர் தேங்கியுள்ளது. மதுரை மாநகராட்சி மண்டல உதவி ஆணையாளர்கள், சாலையில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்த வேண்டும் என்பது, இப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

Tags

Next Story
ai in future agriculture