மதுரை மாநகராட்சி சார்பில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்
மதுரை மாநகராட்சியில் ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை, மேயர், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், ஆணையாளர் ஆகியோர் திறந்து வைத்தனர்
மதுரை மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் ஆணையாளர் கே.ஜே.பிரவீன்குமார் முன்னிலையில் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு) அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில் , குடிநீர் குழாய் இணைப்பு வேண்டி 2 மனுக்களும், பாதாளச் சாக்கடை வசதி வேண்டி 2 மனுக்களும், வருவாய் இனங்கள் தொடர்பாக 10 மனுக்களும், இதர கோரிக்கைகள் தொடர்பாக 11 மனுக்களும் என, மொத்தம் 25 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து மேயரால், நேரடியாக பெறப்பட்டது.
தொடர்ந்து, மண்டலம் 4 வார்டு எண்.86 கீரைத்துரை அருப்புக்கோட்டை நாடார் தொடக்கப் பள்ளியில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சத்துணவு மைய கட்டிடம், மண்டலம் 5 வார்டு எண்.74 பழங்காநத்தம் சோமசுந்தர பாரதியார் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் கழிப்பறை கட்டிடம், வார்டு எண்.72 பைக்காரா முத்துராமலிங்கபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவர் என, மொத்தம் ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை, மேயர், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், ஆணையாளர் ஆகியோர் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள்.
முன்னதாக, மண்டலம் 2 வார்டு எண்.31 டாக்டர் தங்கராஜ் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த படிப்பக வளாகத்தில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் படிக்கும் மாணவ, மாணவிகளின் வசதிக்காக உணவருந்தும் கூடம் மற்றும் உட்கட்டமைப்பு ஏற்படுத்துவதற்கான பணியினை, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர், வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தளபதி ஆகியோர் தொடக்கி வைத்தார்கள்.
இந்நிகழ்வில், வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர்கள் முகேஷ்சர்மா, சரவணபுவனேஸ்வரி, சுவிதா, கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், துணை ஆணையாளர்கள் சரவணன், தயாநிதி, உதவி ஆணையாளர் (பணி) ஆறுமுகம். நிர்வாக அலுவலர் சுரேஷ்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், மாமன்ற உறுப்பினர்கள் முருகன், சுமன் , கருப்புசாமி, கண்காணிப்பாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu