மதுரை மீனாட்சியம்மன் கோயில் இன்று திறப்பு: பொதுமக்கள் மகிழ்ச்சி

மதுரை மீனாட்சியம்மன் கோயில் இன்று திறப்பு: பொதுமக்கள் மகிழ்ச்சி
X

மதுரையில் அரசு அனுமதியையொட்டி இன்று திறக்கப்பட்ட கோயில்.

வெள்ளிக்கிழமைகளில் சுவாமி தரிசனம் செய்வது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமையான இன்று கோயில் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக, கூட்டம் கூடுவதை தவிர்க கோயில்களில் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை.. ஆனால், வழக்கம்போல் ஆகமவிதிப்படி நடைபெறும் அதிகாலை பூஜை, உச்சிகால பூஜை உள்ளிட்டவை பக்தர்கள் அனுமதியின்றி தடைபெற்று வந்தன. தமிழக அரசு அறிவித்த தளர்வுகளின் அடிப்படையில், வெள்ளி, சனி, ஞாயிறு தவிர மற்ற நாட்களில் கோயில்களில் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று இன்று முதல் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களிலும் கோயில்களை திறக்க அரசு உத்தரவிட்டது.



அதனடிப்படையில், வெள்ளிக்கிழமையான இன்று கோயில்களில் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்றுக்குப் பின்னர், வார இறுதி நாளான வெள்ளி சனி ஞாயிறு ஆகிய நாட்களில் பொதுமக்கள் அதிக அளவில் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அந்த அடிப்படையில் இன்று வெள்ளிக்கிழமை என்பதால், பொதுமக்கள் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.இதுகுறித்து, பெண்கள் கூறுகையில், கொரோனா தொற்றுக்கு பின்னர், வார இறுதி நாட்களில் விடுமுறை என்பதால், அதிலும் குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் சுவாமி தரிசனம் செய்வது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும், மேலும், இந்தக் கொரோனா தொற்று முழுமையாக நீங்கிட, உலக அமைதி பெறவும் சுவாமி தரிசனம் செய்ததாக தெரிவித்தனர்.

Tags

Next Story
ai solutions for small business