மதுரை மீனாட்சி அம்மன் ஆலய விழா- சுவாமி-அம்பாள் திருவீதி உலா
![மதுரை மீனாட்சி அம்மன் ஆலய விழா- சுவாமி-அம்பாள் திருவீதி உலா மதுரை மீனாட்சி அம்மன் ஆலய விழா- சுவாமி-அம்பாள் திருவீதி உலா](https://www.nativenews.in/h-upload/2022/04/06/1510753-img-20220405-wa0005.webp)
உலகப்புகழ் பெற்ற, மதுரை சித்திரைத் திருவிழா, கொரோனா பெருந்தொற்று காரணமான கடந்த 2 ஆண்டுகள் கோவில் வளாகத்திலேயே பக்தர்களின் பங்கேற்பின்றி நடைபெற்றது.
இந்நிலையில், தற்போது கொரோனா நோய்த் தொற்றுக் கட்டுப்பாடுகள் முழுவதுமாக நீக்கப்பட்டுள்ள நிலையில், சித்திரைத் திருவிழா வெகு கோலாகலமாக நடைபெற்று வருகிறது.மேலும் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியர்களின் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்று ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதனையடுத்து ,சித்திரை பெருவிழாவின் முதல் நாளான நேற்று மாலை வெள்ளி சிம்மாசனத்தில் கோவிலின் உள்ளே அமைந்துள்ள குலாலர் மண்டகப்படியில் அம்மனும் சுவாமியும் எழுந்தருளி. பிறகு அங்கிருந்து புறப்பாடாகி நான்கு மாசி வீதிகளில் சிம்ம வாகனத்தில் மீனாட்சி அம்மனும், கற்பகவிருட்சம் வாகனத்தில்சுந்தரேசுவரரும் பிரியாவிடையும் எழுந்தருளி விதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று சித்திரைத் திருவிழாவின் முதல் நாளில் அம்பாளும் சுந்தரேஸ்வரப் பெருமான் வீதி உலா வருவதை ஆயிரக்கணக்கான மக்கள் மாசி வீதிகளில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.மேலும் சிறுவர்கள் சிறுமிகள் மீனாட்சி அம்மன் போல வேடமணிந்தும், கோலாட்டம், சிலம்பட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், உள்ளிட்ட பல்வேறு வகையான பாரம்பரிய கலை வெளிப்படுத்தியவாறு மாசி வீதி விதி உலா வந்தது பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu