மதுரை ஆட்சியர் வளாகத்தில், மனைவி முன்பு கணவர் தீக்குளிக்க முயற்சி?
மதுரை கரிமேடு பகுதியில் வசித்து வருபவர் சுப்பையா. இவருக்கு சொந்தமான வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு சில வருடங்களுக்கு முன்பாக அழகுராஜா என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். அழகுராஜா நடவடிக்கையில் இவருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ள காரணத்தினால் தயவுசெய்து எனது வீட்டை காலி செய்து தாருங்கள் என பல முறை சொல்லியுள்ளார்.
இருப்பினும் கூட அழகுராஜா காலி செய்ய முடியாது என்று வயதான தம்பதிகளை அச்சுறுத்தி உள்ளார். இதனால் மனம் உடைந்த சுப்பையா தனது மனைவியுடன் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். உடனடியாக தல்லாகுளம் போலீசார் விரைந்து வந்து அவர்களை தடுத்து நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று முழுமையான விசாரணை நடத்தி வருகின்றனர். மூத்த குடிமக்களான கணவன், மனைவி கண் முன்னே தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவமானது மனு கொடுக்க வந்த சக மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu