மதுரை மாவட்டத்தில் சட்டமன்ற உறுதிமொழிக் குழு ஆய்வு: ஆட்சியர் தகவல்

மதுரை மாவட்டத்தில் சட்டமன்ற உறுதிமொழிக் குழு  ஆய்வு: ஆட்சியர் தகவல்
X
சட்டமன்ற உறுதிமொழி குழு மதுரை மாவட்டத்தில் இன்று ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உள்ளதாக ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்

மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை 2023-2024-ஆம் ஆண்டிற்கானஉறுதிமொழி குழு இன்று (30.05.2023) ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உள்ளது.

சட்டமன்றப் பேரவையின் 2023-2024-ஆம் ஆண்டிற்கான உறுதிமொழி குழு, (30.05.2023) காலை குழு தலைவர், சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் (பண்ருட்டி) தலைமையில், சட்டமன்ற குழு உறுப்பினர்கள் மதுரை மாவட்டத்தில் அரசுத்துறை களின் கீழ் நிறைவேற்றப்பட்டுள்ள மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்கள்.

மேலும், மாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலர்கள் உடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதில், சட்டமன்றப் பேரவையின் 2023-2024-ஆம் ஆண்டிற்கான உறுதிமொழி குழு தலைவர், சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் (பண்ருட்டி) தலைமையில், குழு உறுப்பினர்களாக உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் கே.அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), ஆர்.அருள் (சேலம் மேற்கு), ஐ.கருணாநிதி (பல்லாவரம்), எம்.சக்கரபாணி (வானூர்), எம்.பழனியாண்டி (ஸ்ரீரங்கம்), ஆர்.மணி (ஓமலூர்) ,ரூபி ஆர்.மனோகரன், (நாங்குனேரி) எம்.கே.மோகன் (அண்ணா நகர்), பி.ராமலிங்கம், (நாமக்கல்), ஏ.சி.விஸ்வநாதன், (ஆம்பூர்) எஸ்.ஜெயக்குமார் (பெருந்துறை) ஆகியோர் பங்கேற்க உள்ளார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai in future agriculture