மதுரை மாநகர இன்றைய கிரைம் செய்திகள்

மதுரை மாநகர இன்றைய  கிரைம் செய்திகள்
X

Madurai news, Madurai news today- க்ரைம் செய்திகள் (பைல் படம்).

மதுரை மாநகர் பகுதியில் நடந்த சில கிரைம் செய்திகளை இங்கு காணலாம்.

மாட்டுத்தாவணையில்,தனியார் பஸ் சக்கரத்தில் சிக்கி பைக்கில் சென்ற வாலிபர் சாவு: போலீஸ் விசாரணை

மதுரை மாட்டுத்தாவணையில், தனியார் பஸ் சக்கரத்தில் சக்கரத்தில் சிக்கி, பைக்கில் சென்ற வாலிபர் தலை நசுங்கி இறந்தார். சிவகங்கை மாவட்டம் கீழடி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மோகன் மகன் ஞானபாண்டி 29. இவர், மதுரை மாட்டுத்தாவணி அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்கு நுழைவு வாயிலில் போலீஸ் சிக்னல் அருகே சென்றபோது, தனியார் பேருந்து மோதி சக்கரத்தில் விழுந்தார். இதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த விபத்து குறித்து, உயிரிழந்த ஞானபாண்டியின் மனைவி வினோபிரியா26. போக்குவரத்து புலனாய் பிரிவு போலீசில் புகார் செய்தார். ஆம்னி பஸ் டிரைவர் நிலக்கோட்டை பள்ளப்பட்டியைச் சேர்ந்த முருகன் மகன் ஜெகன் 35 என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, இந்த விபத்துகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெத்தானியா புரத்தில் இளம்பெண் தோக்கு போட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை

மதுரை, பெத்தானியாபுரம் திலீபன் குறுக்கு தெருவை சேர்ந்தவர் முருகன் மகள் சங்கீதா 23. இவர் , மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இதற்கான சிகிச்சையும் பெற்று வந்தார். இந்த நிலையில் தனியாக இருந்தபோது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து, அவருடைய தந்தை முருகன் கரிமேடு போலீஸ் புகார் செய்தார். போலீசார் வழக்கு ப்பதிவு செய்து இளம் பெண் சங்கீதாவின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர் வயிற்று வலி சிறுவன் தூக்கு போட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை

மதுரை, காளவாசல் பாண்டியன் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் முனியாண்டி மகன் கலையரசன் 17. இவருக்கு தொடர்ந்து வயிற்றுவலி இருந்து வந்தது. இதற்காக சிகிச்சையும் பெற்று வந்தார். ஆனால் வலி வயிற்று வலி நிற்கவில்லை. இதனால் வலி தாங்க முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்த சிறுவன் கலையரசன் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து, அவருடைய தந்தை முனியாண்டி கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுவன் கலையரசனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்லூரில் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை

மதுரை, செல்லூர் ஜான்சிராணிபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் முனியாண்டி மகன் தவமுருகன் 52 .இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது .இதனால் வீட்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவருடைய மனைவி நல்லம்மாள் செல்லூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து தவமுருகனின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!