மத்திய அமலாக்கத்துறை அலுவலர் வீட்டில் 25 பவுன் நகை திருட்டு

மத்திய அமலாக்கத்துறை அலுவலர் வீட்டில் 25 பவுன் நகை திருட்டு
X

மத்திய அமலாக்கத்துறை ஊழியர் வீட்டில் 25 பவுன் நகை திருட்டு

மதுரை பெருங்குடி பேராசிரியர் அன்பழகன் நகரை சேர்ந்தவர் ராபின்சன் மகன் பிரின்ஸ்ரிச்சர்ட்சன் 34 .இவர் பெங்களூரில் மத்திய அமலாக்கத்துறை அலுவலகத்தில் கிளார்க்காக வேலை பார்த்து வருகிறார். பெருங்குடியில் சொந்தமாக வீடுகட்டியுள்ளார் .அவருடைய அம்மா அங்கு வசித்து வருகிறார்.. இந்த நிலையில் பெங்களூரில் மகனை பார்க்க தாயார் சென்று விட்டார். அவர் அங்கிருந்து பின்னர் திரும்பி வந்தார். அவர் வந்து பார்த்தபோது வீட்டில் கதவு உடைக்கப்பட்டிருந்தது.அங்கு பீரோவில்வைத்திருந்த 25 பவுன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தன. இது குறித்து தன் மகனுக்கும் அவனியாபுரம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.

இந்த கொள்ளை குறித்து மகன் மத்திய அமலாக்கத்துறை அலுவலர் பிரின்ஸ்ரிச்சர்ட்சன் அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது வீடு புகுந்து கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மாட்டுத்தாவணி அருகே ஐந்து கிலோ கஞ்சாவுடன் ஆந்திர மாநில பெண் கைது.

மதுரை மாட்டுத்தாவணி காவல்நிலைய உதவி ஆய்வாளர் வெள்ளத்துரை. இவருக்கு கிடைத்த ரகசிய தகவலில் மாட்டுத்தாவணி பின்புறம் மீன் மார்க்கெட் அருகே கழிவு நீரேற்றும் நிலையம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

அவர் போலீசாருடன் அங்கு சென்று கண்காணித்தபோது கையில் கட்டைப்பையுடன் இளம்பெண் ஒருவர் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரை பிடித்து சோதனை செய்த போது 5 கிலோ 300 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து பிடிப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினார் .விசாரணையில் ஆந்திர மாநிலம் இந்தூர் காலனி ராயபுரம் லோகேஸ்வர பிரசாத் மனைவி சலப்பக்கா பத்மஸ்ரீ 32 என்று தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். பிடிபட்ட பெண்ணிடமிருந்து கஞ்சாவுடன், ஏடிஎம் கார்டு, பான் கார்டு முதலியவைகள் இருந்தன. அவற்றையும் பறிமுதல் செய்து எங்கிருந்து கஞ்சா வந்தது , அவருடைய கூட்டாளிகள் யாரும் உள்ளனரா,அவரைப்போல வேறு யாரும் மதுரையில் கஞ்சா விற்பனை செய்கிறார்களா என்று அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் குழந்தை திடீர் சளி காய்ச்சலுக்கு மரணம்: போலீஸ் விசாரணை.

மதுரை பழங்காநத்தம் பசும்பொன் நகர் வ உ சி தெருவை சேர்ந்தவர் ராமன் மகன் மாரியப்பன் 39 .இவருடைய மனைவி முத்துலட்சுமி .இவர்களுக்கு எட்டு வயதில் தீபா என்ற மகள் உள்ளார். எட்டு வருடங்களுக்கு பிறகு இவருக்கு 47 நாட்களுக்கு முன்பாக இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் இவருக்கு திடீர் சளியும் காய்ச்சல் வந்தது.அவருக்கு அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது. பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து குழந்தையின் தந்தை மாரியப்பன் அளித்த புகாரின் சுப்பிரமணியபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story