மதுரையில் கடையில் திருட முயன்றபோது பிடிபட்ட சிறுவர்கள்

மதுரையில் கடையில் திருட முயன்றபோது பிடிபட்ட சிறுவர்கள்
X
மதுரையில் பல சரக்கு கடையில் கொள்ளை யடிக்க முயற்சி செய்த இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்

மதுரையில் பல சரக்கு கடையில் கொள்ளை அடிக்க முயற்சி செய்த இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மதுரை மாப்பாளையம் பகுதியில், செயல்பட்டு வந்த பல சரக்கு கடை ஒன்றில் நேற்று இரவு இரண்டு மர்ம நபர்கள் கடையினுள் புகுந்து கொள்ளையடித்து கொண்டிருந்தபோது, காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்துள்ளது. அப்பொழுது, ரோந்து பணியில் எஸ். எஸ். காலனி குற்றப்பரிவு காவல் உதவி ஆய்வாளர் மணிவண்ணன் தலைமையிலான காவல்துறையினர் இரண்டு குழுக்களாக போலீசார் பிரிந்து கொள்ளையடித்து சென்று கொண்டிருந்த கொள்ளையர்களை கையும் களவுமாக பிடித்தனர்.

போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தைத் தொடர்ந்து,சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இரண்டு பேரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது அதே பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் என்பது தெரிய வந்தது. மேலும், இவர்கள் மீது இதேபோல் பல இடங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து என்பது விசாரணையில் தெரிய வருகிறது.

தொடர்ந்து , இரு சிறுவர்களிடம் மதுரை எஸ்எஸ் காலனி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் துரிதமாக செயல்பட்டு கொள்ளையர்களை உடனடியாக கைது செய்த எஸ். எஸ். காலனி காவல் துறையினருக்கு அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

Tags

Next Story
ai in future agriculture