கோவில் உண்டியலை உடைத்து நகை பணம் திருட்டு:வாலிபர் கைது
பைல் படம்
கோவில் உண்டியலை உடைத்து நகை பணம் திருட்டு: வாலிபர் கைது
மதுரை, செல்லூர் மீனாம்பாள்புரம் பட்டுக்கோட்டையை கல்யாண சுந்தரம் தெருவில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. சம்பவத்தன்று இந்த கோவிலின் உண்டியலை உடைத்து அதில் இருந்த ஒன்னேகால் பவுன் தங்க நகை, பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் ரூ 9 ஆயிரத்து 177ஐ மர்மநபர் திருடிச்சென்று விட்டார். இந்த திருட்டு குறித்து கோவில் நிர்வாகி ரமேஷ் செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் உண்டியலை உடைத்து திருடிய அதே பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் மகன் மீனாட்சி சுந்தரம் 33 என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தகராறை விலக்கி விடச் சென்ற மாமனார் மருமகனை தாக்கிய அண்ணன் தம்பி கைது.
மதுரை அவனியாபுரம் தந்தை பெரியார் நகர் பூந்தோட்ட நகரை சேர்ந்தவர் அழகர்சாமி 45. இவரது ரஞ்சித் குமார் 28.இவர்கள் உறவினர்கள் ஆவார்கள். இவருக்கும் ரஞ்சித் குமார் மகள் குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று அழகர்சாமியின் மகளுடன் ரஞ்சித் குமார் வாய் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதை அழகர்சாமியும் அவரது மருமகனும் விலக்கச் சென்றனர். அப்போது ஆத்திரமடைந்த ரஞ்சித் குமார் ஆபாசமாக பேச்சி மாமனார் அழகர்சாமியையும் அவர் மருமகனையும் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார் .இந்த தாக்குதல் குறித்து அழகர்சாமி அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காவேரி நகர் 2வது தெருவை சேர்ந்த கண்ணன் மகன் ரஞ்சித் குமார் 28 அவருடைய சகோதரர் லட்சுமணன் 24 ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
செருப்புக்கு கடை உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு:வாலிபர் கைது
மதுரை ஜூலை 19 கோச்சடை அங்காள ஈஸ்வரி நகரை சேர்ந்தவர் சோமசுந்தரம் மகன் சரவணகுமார் 49 .இவர் கோச்சடை பஸ் ஸ்டாப் அருகே செருப்பு கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு காளை அம்பலக்கார தெருவை சேர்ந்த முருகன் மகன் வினோத்குமார் 32 அவருடைய நண்பர் ஆனந்த் இருவரும் செருப்பு வாங்க சென்றனர். அங்கு செருப்பு வாங்கிக் கொண்டு பணம் கொடுக்காமல் திரும்பிச் சென்றனர் .அவர்களை தடுத்து சரவணக்குமார் பணம் கேட்டுள்ளார். இதனால் இருவரும் ஆத்திரமடைந்தனர். அவர்கள் கடை உரிமையாளர் சரவணகுமாரை ஆபாசமாக பேசி அரிவாளால் வெட்டி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து சரவணனகுமார் எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வினோத் குமார் ஆனந்த் இருவர் மீது வழக்கு பதிவு செய்து வினோத்குமாரை கைது செய்தனர் .ஆனந்தை தேடி வருகின்றனர்.
சிறுமி தூக்கு போட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை
மதுரை ஜூலை 19 எம் கே புரம் காஜா தெரு ஏ.ஏ. ரோட்டை சேர்ந்தவர் சந்திரசேகர் மகள் முத்துநாயகி15.இவர் வீட்டில் இரண்டு நாட்களாக யாரிடமும் பேசாமல் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் தனியாக இருந்தபோது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவருடைய தந்தை சந்திரசேகர் தெற்கு வாசல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமி முத்து நாயகியின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவியுடன் கருத்து வேறுபாடு:கணவர் தூக்கு போட்டு தற்கொலை
மதுரை ஜூலை 19 எஸ். கொடி குளம் பாரத் நகர் 5வது தெருவை சேர்ந்தவர் மலைச்சாமி மகன் சூர்யா 21 .இவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மன அழுத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை குறித்து அவருடைய அம்மா வள்ளி திருப்பாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சூர்யாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெராக்ஸ் மூலம் போலியான ரத்த சோதனை சான்று வழங்கிய பெண் கைது
மதுரை தெற்கு ஆர்டிஓ சிங்காரவேலு. இவர் லைசென்ஸ் மற்றும் ஆசிய புத்தகங்கள் வழங்குவது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை ஆவணங்களை சோதனை செய்தபோது அதில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த ரத்த சோதனை சான்றுகளில் சில போலியானது என்று தெரியவந்தது. இது குறித்து அவர் எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அவர்கள் நடத்திய விசாரணையில் அந்த சான்றிதழ்களை அருள்நகர் பைபாஸ் ரோட்டில் ஜெராக்ஸ் கடை ஒன்றிலிருந்து வழங்கப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து அவர்கள் போலியான சான்றுகள் தயாரித்து வழங்கிய பழங்காநத்தம் வசந்த நகரை சேர்ந்த ஆனந்த் மனைவி பிரபா வசந்தகுமார் 37 என்ற பெண்ணை கைது செய்தனர். அவர் எத்தனை பேருக்கு இது போன்ற சான்றிதழ் வழங்கியுள்ளார். என்பது குறித்தும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu