மகன் இறந்த வேதனையில் தந்தை தற்கொலை

மகன் இறந்த வேதனையில் தந்தை தற்கொலை
X
மதுரையில் பல்வேறு இடங்களில் நடந்த திருட்டு போனது குறித்து போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்

மகன் இறந்த வேதனையில் தந்தை தூக்கு போட்டு தற்கொலை:

மதுரை,திருப்பரங்குன்றம் கோட்டை தெருவை சேர்ந்தவர் செல்லையா 73. இவரது மகன் எட்டு மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் மன அழுத்தத்தில் இருந்து வந்த தந்தை செல்லையா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் குறித்து, பேரன் முத்துக் கருப்பன் திருப்பரங்குன்றம் போலீசில் புகார்செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெப்பக்குளம் பகுதியில் வீடு புகுந்து 26 பவுன் பணம் ரூ.10,ஆயிரம் திருட்டு.

மதுரை தெப்பக்குளம் பகுதியில், வீடு புகுந்து 26 பவுன் தங்க நகை ரூ பத்தாயிரம் திருடிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை தெப்பக்குள்ம கொண்டி தோப்பு தெருவை சேர்ந்தவர் ஜஸ் மந்த்மஸ்ரானன். இவரது மகன் பீமல் ராய் 32. சம்பவத்தன்று இவர், வீடு புகுந்த மர்மநபர் வீட்டில் பீரோவில் இருந்த 26 பவுன் தங்க நகைகளையும் ரூபாய் 10 ஆயிரம் மற்றும் வாட்ச் ஒன்றையும் திருடி சென்று விட்டனர். இது குறித்து, பீமல்ராய் தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து நகை பணம் திருடிய ஆசாமியை தேடி வருகின்றனர்.

கீரை துறையில் வேனில் பேட்டரி திருட்டு: வாலிபர் கைது.

மதுரை , சிந்தாமணி நெடுங்குளம் அம்மன் தெருவை சேர்ந்தவர் ஞானசேகர் 41. இவர் சொந்தமாக வேன் ஓட்டி வருகிறார். சிந்தாமணி பகுதியில், வேனைநிறுத்தி இருந்தார். பின்னர் வந்து பார்த்தபோது, அதிலிருந்து பேட்டரி திருடப்பட்டிருந்தது. இது குறித்து, ஞானசேகர் கீரைத்துரை போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தினர் .விசாரணைக்கு பின் டார்க் பங்களா வீட்டு வசதி வாரிய குடியிருப்பு டீக்கடைதெருவை சேர்ந்த சிவனேசன் மகன் கருப்பசாமி என்ற பாவாடை 21. என்ற வாலி வரை போலீசார் கைது செய்தனர்.கிழக்கு வாசல் பகுதியில்வீடு புகுந்து 9 பவுன் நகை திருட்டு. போலீஸ் விசாரணை.

வீடு புகுந்து 9 பவுன்தங்க நகை சில்வர் பொருள்கள் திருடிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை தெற்கு வாசல் தெற்கு கிருஷ்ணன் மூன்றாவது தெருவை சேர்ந்த ரத்தினகிரி 54. சம்பவத்தன்று அதிகாலை இவரது வீடு புகுந்த மர்மநபர் வீட்டில் பீரோவில் வைத்திருந்த ஒன்பது பவன் தங்க நகை மற்றும் சில்வர் பொருட்களை திருடி சென்று விட்டார். இந்த திருட்டு குறித்துரத்தினகிரி, தெற்கு வாசல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, வீடு புகுந்து 9பவுன் நகை வெள்ளி பொருட்கள் திருடிய ஆசாமியை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!