மதுரை அருகே இளைஞரை தாக்கிய 4 பேர் கைது

மதுரை அருகே இளைஞரை தாக்கிய   4  பேர் கைது
X
மதுரையில் நடந்த பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய 8 பேரை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்

முன் விரோதத்தத்தால் வாலிபரை பீர் பாட்டிலால் தாக்கிய சிறுவன் உட்பட நான்கு பேர் கைது.

மதுரை தத்தனேரி கண்மாய்கரை கணேசபுரத்தைச் சேர்ந்தவர் நாகேந்திரன் மகன் கருப்பசாமி 22அதே பகுதியைச் சேர்ந்தவர் சின்னபேய் என்ற ஹரிஷ். இவர்கள் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் தத்தனேரி சுடுகாட்டு காளியம்மன் கோவில் அருகே சென்ற கருப்பசாமியை வழிமறித்து 17 வயது சிறுவன் உள்பட ஆறு பேர் அவரை ஆபாசமாக பேசி பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து கருப்பசாமி செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் 17 வயது சிறுவன் உள்பட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.சிறுவன் உட்பட ஒன்றரை என்ற ஐயனார் 20, ஆகாஷ் என்ற காளிதாஸ், சித்திரைச் செல்வம் என்ற தொத்தல் உள்பட நான்கு பேரை கைது செய்தனர் .சின்னபேய் என்ள ஹரிஸ்,கிஸ்மி என்ற குரேநாதனை தேடி வருகின்றனர்.

திருநகரில் வாலிபரிடம் ரூ 2000 வழிப்பறி: போலீஸார் விசாரணை

மதுரை திருநகர் நெல்லையப்பபுரம் ஐந்தாவது தெருவை சேர்ந்தவர் செல்லையா மகன் மணிவாசகம் 39. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இரண்டு ஆசாமிகள் அவரை மிரட்டி அவரிடம் இருந்து ரூபாய் 2000, ஆதார் கார்டு ஒன்றும், டிரைவிங் லைசன்ஸ்ஸையும் பறித்துச் சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து மணிவாசகம் திருநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் பணம் பறித்த ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

தந்தை கண்டித்ததால் மனமுடைந்த சிறுமி தூக்கு போட்டு தற்கொலை

மதுரை விளாச்சேரி மொட்டமலை கலைஞர் நகரை சேர்ந்தவர் தங்கபாண்டி. இவரது மகள் பிரியதர்ஷினி 16 .இவர் வீட்டு வேலையில் கவனம் இல்லாமல் இருந்துள்ளார். இதனால் அவருக்கு அறிவுரை சொல்லி வீட்டு வேலைகளை பார்க்கச் சொல்லியுள்ளார் தந்தை. இதன் காரணமாக மனமுடைந்த சிறுமி பிரியதர்ஷினி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தந்தை தங்கபாண்டி திருநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரயில்வே காலனியில் ஊழியர் மயங்கி விழுந்து மரணம்: போலீஸார் விசாரணை.

விருதுநகர் மாவட்டம் கொள்வார்பட்டியை சேர்ந்தவர் சின்னன்இளமுடையார். இவரது மகன் அடைக்கல முத்து 28. இவர் ரயில்வேயில் தற்காலிக பணியாழராக கடந்த பத்து நாட்களாக வேலை பார்த்து வந்தார்.இந்நிலையில் ரில்வே காலனியில் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென்று மயங்கி விழுந்தார். உயிருக்கு போராடிய நிலையில் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து தந்தை சின்னன் இளமுடையார் திலகர்திடல் போலீசில் புகார்செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் அடைக்கல முத்துவின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பசுமாடு திருட்டு: ஒட்டன்சத்திரம் சந்தையில் விற்ற போது கணவன் மனைவி கைது மதுரை எஸ் எஸ் காலனி தாமஸ் காலனியை சேர்ந்தவர் முத்தையா மகன் பெரிய முத்து 39.இவர் பசுமாடு வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று அவருடைய மாடு திருடு போய்விட்டது. இது தொடர்பாக எஸ் எஸ் காலனி போலீசில் அவர் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டு ஆசாமியை தேடி வந்தனர். இந்த நிலையில் மாட்டின் உரிமையாளர் பெரிய மருதுவும் பல்வேறு இடங்களில் மாட்டை தேடி வந்தார்.

மாட்டுச் சந்தைகள் நடைபெறும் இடங்களுக்கெல்லாம் சென்று தேடி வந்தார். இவர் ஒட்டன்சத்திரம் மாட்டு சந்தைக்கும் சென்றுள்ளார்.அங்கு அவர் பார்த்தபோது கணவன் மனைவி இரண்டு பேர் அவருடைய மாட்டை இன்னொருவருக்கு விற்பனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இருவரையும் பெரிய முத்து கையுங்கலவுமாக பிடித்தார். அவர்களை எஸ் எஸ் காலனி போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அவர்களிடம் விசாரித்த போது திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கிழக்கு தெரு குன்னத்தூர் வெள்ளைசாமி மகன் பெரியசாமி 38, அவருடைய மனைவி சத்யா 34 என்று தெரியவந்தது அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

மற்றொரு திருட்டு

பெரிய முத்துவின் மாடு திருட்டு போன அதே நாளில் அதே பகுதியில் ஆறுமுகம் மகன் விஷ்னு என்பவரின் மாடும் திருடப்பட்டிருந்தது. இவரும் எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்திருந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டு ஆசாமியை தேடி வந்த நிலையில் கணவன் மனைவி பிடிபட்டுள்ளனர். இந்த சம்பவத்திலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் பயனிடம் செல்போன் திருட்டு: ஒருவர் கைது

கோயம்புத்தூர் காந்தி பார்க் தெலுங்கு தெருவை சேர்ந்தவர் உத்தரபாண்டியன் 56. இவர் மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அவரிடம் இருந்த செல்போனை ஒருவர் திருட முயன்றார். அவரை கையும் களமாக உத்தரபாண்டியனும் மற்றும் சில பயணிகளும் விரட்டி பிடித்தனர். பிடிபட்டவரை கரிமேடு போலீசில் ஒப்படைத்தனர்.அந்த நபரிடம் போலீசார் விசாரித்த போது, திண்டுக்கல் நாயக்கர்புதுத்தெரு கோவிந்தாபுரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் 45 என்று தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story