நீட் தேர்வில் வெற்றி பெற்ற மதுரை மாநகராட்சிப்பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மதுரை மாநகராட்சிப்பள்ளி  மாணவிகளுக்கு பாராட்டு
X

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாநகராட்சி பள்ளி மாணவிகளை பாராட்டிய ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன். 

மாநகராட்சிப்பள்ளியில் படித்து வெற்றி பெற்ற மாணவிகளை மதுரை மாநகராட்சி ஆணையாளர் மரு.கார்த்திகேயன் பாராட்டினார்.

மதுரை:

மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாநகராட்சி பள்ளி மாணவிகளை ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன், பாராட்டினார்.

மதுரை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள 15 மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்;கு நீட் தேர்விற்கான சிறப்பு பயிற்சி மாநகராட்சியின் சார்பில் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி 2020-2021 ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் மாநகராட்சியின் சார்பில் 54 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதினார்கள். அதில் 26 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற்ற அவ்வை மாநகராட்சி பள்ளியை சார்ந்த இரண்டு மாணவிகள் ஆர்.பிரியங்கா – 414 மதிப்பெண், ஏ.ஜி.தீபாஸ்ரீ - 301 மதிப்பெண், ஈ.வெ.ரா. மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சார்ந்த எஸ்.ஆஷிகாராணி – 351 மதிப்பெண் பெற்று மாணவிகள் நீட் டாப்பராக வெற்றி பெற்று உள்ளனர். நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன், பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், கல்வி அலுவலர்mஆதிராமசுப்பு, உதவி கல்வி அலுவலர் ராஜேந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர்கள் உட்பட மாணவிகள், பெற்றோர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story