மதுரை மாநகராட்சி தேர்தல் பூத் சிலிப்பில் சின்னம் : தேமுதிகவினர் புகார்

மதுரை மாநகராட்சி தேர்தல் பூத் சிலிப்பில்  சின்னம் : தேமுதிகவினர் புகார்
X

மதுரை மாநகராட்சி தேர்தலில் வார்களிக்க வரும் மக்கள் கொண்டுவந்த பூத் சிலிப்பில் கட்சி சின்னம் இருப்பதாக தேமுதிகவினர்  புகார் தெரிவித்தனர்

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 73-வது வார்டுக்கு உட்பட்ட கோவலன் நகர் பகுதியில் இச்சம்பவம் நடந்தது

மதுரையில் வாக்குசாவடிக்கு வரும் வாக்காளர்களுக்கு கைச் சின்னம் அச்சிடப்பட்ட பூத் ஸ்லிப் வழங்கியதாக தேமுதிக குற்றச்சாட்டால் பரபரப்பு:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு சனிக்கிழமை காலை 7 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது. அந்தவகையில் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 73-வது வார்டுக்கு உட்பட்ட கோவலன் நகர் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி மையத்திற்கு வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் கைச்சின்னம் அச்சிடப்பட்ட பூத் ஸ்லிப்பை வழங்கி வருவதாக, மாற்று கட்சி வேட்பாளர்கள் மற்றும் தேமுதிகவை சேர்ந்த பூத் ஏஜெண்டுகள் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து வாக்காளர்களிடம் இருந்து பூத் ஸ்லிப் வாங்கி மாற்று பூத் சிலிப் வழங்க ஏற்பாடு செய்தனர்.தொடர்ந்து, சம்பந்தப்பட்டவர்களை வாக்குச்சாவடி மையத்திலிருந்து அகற்றும் படியும் தொடர்ந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தேமுதிகவை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
ai automation in agriculture