மதுரை மாநகராட்சி மண்டல அலுவலக வாசலில் பாஜக உறுப்பினர் தர்ணா போராட்டம்
மாநகராட்சி கவுன்சிலர் ஜனா ஸ்ரீ முருகன் மாநகராட்சி மண்டலம் நான்காவது அலுவலகம் முன்பாக அமர்ந்து போராட்டம் நடத்தி நடத்தினார்
மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் பாஜக உறுப்பினர் தர்ணா போராட்டம்
மதுரை மாநகராட்சி 86 ஆவது வார்டு கவுன்சிலர் பூமாஜனா ஸ்ரீ முருகன். இவர், தனது வார்டில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படாமல் இருப்பதாக புகார் கூறி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
பாதாள சாக்கடைவசதி,வார்டில் குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதாகவும் , குடிநீரில் சாக்கடை கலந்து வருவதாகவும் , பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட மணல்கள் அப்புறப்படுத்தப்படாமல் அப்படியே கிடந்து வருவதாகவும் குறைகூறினார். இதனால், வாகனங்களில் செல்பவர்கள் தவறி விழுந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாகவும் குறை கூறினார். இது தொடர்பாக, மாநகராட்சி அதிகாரியிடம் பல்வேறு புகார்களை கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதை க்கண்டித்து, மாநகராட்சி கவுன்சிலர் ஜனா ஸ்ரீ முருகன் மாநகராட்சி மண்டலம் நான்காவது அலுவலகம் முன்பாக அமர்ந்து போராட்டம் நடத்தி நடத்தினார் .இதனால், பரபரப்பு ஏற்பட்டது.
இஸ்மாயில்புரத்தில் வாலிபரை வழிமறித்து தாக்குதல்:ஒருவர் கைது
மதுரை, இஸ்மாயில்புரத்தில் முன்விரோதத்தில் வாலிபரை வழிமறித்து தாக்கிய ஒருவரை போலீசார் கைது செய்தனர்.முனிச்சாலை இஸ்மாயில்புரம் 6வது தெருவைச் சேர்ந்தவர் இளங்கோ மணி 60. இவருக்கும் இஸ்மாயில்புரம் 12வது தெருவை சேர்ந்த சேர்ந்த கணேசன் மகன் கோபி(35 )என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது .இந்த நிலையில்புரம் இஸ்மாயில் புரம் ரைஸ்மில் அருகே சென்ற பாலமுருகனை வழிமறித்து ஐந்து பேர் தாக்கினார். இந்த சம்பவம் குறித்து பாலமுருகன் தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் கோபி,ஆறுமுகம்,சுடலை உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து சுடலையை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
ஆரப்பாளையத்தில் முன் விரோதத்தில் ஒருவரை தாக்கி கட்டை விரலை கடித்தவர் கைது
மதுரை ஆரப்பாளையம் டி டி மெயின் ரோட்டை சேர்ந்தவர் கோபிகுமார்( 52.). அவர் வசிக்கும் வீட்டின் முதல் தளத்தை சேர்ந்தவர் ஆரோக்கிய ஜெயராஜ்( 55.). இவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது .இந்த நிலையில் ஒருவரை ஒருவர் ஆபாசமாகப் பேசி தாக்கி கொண்டனர். இந்த மோதலில் கோபி குமாரை தாக்கிய ஆரோக்கிய ஜெயராஜ் அவரது கட்டை விரலை கடித்தார். இந்த சம்பவம் குறித்து கோபிகுமார் கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தாக்கி கட்டைவிரலை கடித்த ஆரோக்கியராஜை கைது செய்தனர்.
சுந்தரராஜபுரம் மார்க்கெட்அருகே கத்திய முனையில் வழிப்பறி: ஒருவர் கைது
மதுரை ஜெய்ஹிந்த்புரம் நேதாஜி ரோடு வாணியர் முதல் தெருவை சேர்ந்தவர் வீரமணி மகன் விக்னேஷ்( 29 ).இவர் ஜெய்ஹிந்த்புரம் இரண்டாவது மெயின் ரோடு சுந்தரராஜபுரம் மார்க்கெட் அருகே நடந்து சென்றார். அப்போது அவரை வழிமறித்த வாலிபர் கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்துரூ 360 -ஐ வழிப்பறி செய்துவிட்டார் .இந்த சம்பவம் குறித்து விக்னேஷ் ஜெய்ஹிந்துபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் ஜெய்ஹிந்த்புரம் ஜானகி நகர் முதல் தெருவை சேர்ந்த பூமிநாதர் மகன் ஆதி பரமேஸ்வரன் என்ற பரமனை கைது செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu