வியாபாரியை மிரட்டிய 2 ரவுடிகள் கைது உள்ளிட்ட மதுரை மாநகர க்ரைம் செய்திகள்

வியாபாரியை மிரட்டிய 2 ரவுடிகள் கைது உள்ளிட்ட மதுரை மாநகர க்ரைம் செய்திகள்
X
வியாபாரியை மிரட்டிய 2 ரவுடிகள் கைது உள்ளிட்ட மதுரை மாநகர க்ரைம் செய்திகள் இங்கு பதிவிடப்பட்டுள்ளன.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கீழப்புதூரை சேர்ந்தவர் மலைச்சாமி (வயது 46.)இவர் ஆரப்பாளையம் டவுன் பஸ் ஸ்டாண்ட் அருகே கூழ் வியாபாரம் செய்து வருகிறார்.இவரிடம், இரண்டு பேர் தாங்கள் பிரபல ரவுடி என்று சொல்லி பணம் கேட்டுள்ளனர்.அதற்கு அவர் மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் தாங்கள் மறைத்துவைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து மிரட்டி அவரிடமிருந்து ரூ650-ஐ பறித்துச்சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து, மலைச்சாமி கரிமேடு போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.பின்னர் அவரிடம் பணம் பறித்த சகாயமாதா தெருவைச்சேர்ந்த அஜய்பிரசன்னகுமார் (20,)மஞ்சள் மேட்டுக்காலனி மலையாளம் மகன் ஜீவமணி (22).ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

மதுரை முத்துப்பட்டி அய்யனார்புரம் முதல்தெரு லெட்சுமணன் மகன் சின்ராஜ் (வயது 35.)இவர் பலரிடம் கடன் வாங்கியுள்ளார்.கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தனர்.இதனால், மனமுடைந்த சின்ராஜ் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் குறித்து, மனைவி இந்துமதி சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவுசெய்து ,இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை கருப்பாயூரணி சின்னப்பாண்டி கோவில் தெருவைச் சேர்ந்தவர் சின்னக்கருப்பு (வயது43). வண்டியூர் கண்மாய்க்கரைக்கு மீன் பிடிக்கச்சென்றவர் வீடு திரும்பவில்லை.கண்மாய்க்கரையில் இவர் ஓட்டிச் சென்ற பைக் மட்டும் நின்றது.இதனால், சந்தேகமடைந்து தண்ணீருக்குள் தேடியபோது நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்.இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி யஞ்சு மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார். போலீசார், சின்னக்கருப்புவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம்குறித்து, வழக்குப்பதிவுசெய்து சின்னக்கருப்புவின் சாவுக்கான காரணம்குறித்து விசாரணை நடத்தூ வருகின்றனர்.

மதுரை திருப்பரங்குன்றம் ராஜீவ்காந்தி நான்காவது தெருவைச் சேர்ந்தவர் சந்திரன் மகன் அருண்பாண்டி( 24.)இவருக்கு வலிப்பு நோய் இருந்தது.அதற்கான சிகிச்சையும் பெற்றுவந்தார்.இந்நிலையில் உறவினருடன் திருப்பரங்குன்றம் சரவணபொய்கைக்கு குளிக்கச்சென்றவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து அவர் தந்தை கணேசன் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் உயிரிழந்த அருண்பாண்டியின் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவுசெய்து வாலிபர் அருண்பாண்டியின் சாவுக்கான காரணம்குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story