காபி கடையில் திருட்டு உள்ளிட்ட மதுரை மாநகர குற்றச் செய்திகள்

காபி கடையில் திருட்டு உள்ளிட்ட மதுரை மாநகர குற்றச் செய்திகள்
X
காபி கடையில் பூட்டை உடைத்து திருட்டு உள்ளிட்ட மதுரை மாநகர குற்றச் செய்திகள் இங்கு பதிவிடப்பட்டுள்ளன.

மதுரை தல்லாகுளத்தில், காபி கடையை உடைத்து ரூபாய் ஆயிரத்து 150 திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

மதுரை தல்லாகுளம் அருகே வாகைகுளம் மேல பனங்காடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அசன் மைதீன் மகன் நாகூர் கனி (வயது39.)

இவர், தல்லாகுளம் தந்தி ஆபீஸ் எதிரே காபி கடை நடத்தி வந்தார். வழக்கம் போல் இரவு கடையை போட்டுவிட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலை கடையை திறக்க வந்தபோது, கடையின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. வியாபாரம் செய்து கல்லாவில் வைத்திருந்த ரூபாய் ஆயிரத்து 150 திருடப்பட்டிருந்தது .

இது குறித்து, அவர் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.பின்னர் காபி கடையை உடைத்து பணம் திருடிய செல்லூர் காளியம்மன் கோவில் தெரு அழகர்சாமி மகன் கண்ணன் (19, )அழகர் கோயில் காரியாபட்டி அழகாபுரியை சேர்ந்த பாரதிராஜா மகன் சிவா(19 )ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

கார் திருட்டு

மதுரை அண்ணா நகரில், லாட்ஜ் முன்பாக பார்க்கிங்கில் நிறுத்தி இருந்த கார் திருட்டு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை சோழிங்கநல்லூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் விகாஸ் விஷ்ணு( 29. )இவர் உறவினர்களுக்கு திருமண பத்திரிகை கொடுப்பதற்காக, மதுரை வந்திருந்தார். அண்ணா நகரில் லாட்ஜ் ஒன்றில் ரூம் எடுத்து தங்கி இருந்தார். அவர் பத்திரிகைகளை கொடுத்துவிட்டு, லாட்ஜில் தங்குவதற்காக வந்தபோது, பார்க்கிங்கில் நிறுத்தச் சொல்லி அங்கிருந்தவரிடம் கார் சாவியை கொடுத்துள்ளார். ஆனால் ,அவர் அங்கு காரை நிறுத்தாமல் திருடிச் சென்று விட்டார்.

இது குறித்து, பின்னர் தெரியவந்தது.விகாஸ் விஷ்ணு அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்குப் பதிவு செய்து சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் காரை திருடிச்சென்ற தென்காசி மாவட்டம் புளியங்குடி தங்கம் மகன் மயில்வாகனன்( 33.) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இளைஞர் தற்கொலை

திருப்பரங்குன்றத்தில் பனியன் தொலைந்து போனதில் அண்ணன் தம்பிக்குள் ஏற்பட்ட தகராறில் மணமடைந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை திருப்பரங்குன்றம் நிலையூர் சந்திப்பு முதல் தெருவை சேர்ந்தவர் அலிக்கான் மகன் சாருக்கான்( 25.) இவர் சின்ன பிரச்சனை என்றாலும் குடும்பத்தில் நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று புலம்பி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கு முன்பு இதேபோல் பிளேடால் கைகளை நறுக்கிக்கொண்டுள்ளார். இந்த நிலையில் சகோதரனின் பனியன் தொலைந்து போய்விட்டதால், அண்ணன் தம்பிக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த வாலிபர் சாருக்கான் வீட்டில் அறைக் கதவைப் பூட்டிக் கொண்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து, தந்தை அலிகான் கொடுத்த புகாரில் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப் பதிவுசெய்து, வாலிபர் சாருக்கானின் சாவுக்க்ன காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூடல் புதூரில் விபத்தில் சிக்கிய வாலிபர் வேலையில்லாமல் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை ஆனையூர் இந்திரா நகர் துரைராஜ் மகன் சரவணன்( 28 ).இவர் ,4 மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கினார். இதில் அவருக்கு தலையில் பலமாக அடிபட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால், அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதன் காரணமாக மனமுடைந்து வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இந்த சம்பவம் குறித்து, அவருடைய மனைவி அழகு மகேஸ்வரி கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரவணனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!