மது குடிப்பதற்கு பணம் தர மனைவி மறுத்ததால் கணவர் தூக்கு போட்டு தற்கொலை
பைல் படம்
பிறந்து மூன்று நாளான பெண் குழந்தை திடீர் மரணம்
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கல்லாணை காந்திகிராமம் புது காலனியை சேர்ந்தவர் பெருமாள் மகன் இளங்கோவன் 30. இவருடைய மனைவி நாகஜோதி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மூன்றாவதாக நாகஜோதி கருவுற்றார். அவரை சிகிச்சைக்காக அலங்காநல்லூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்து சேர்த்தனர்.
இங்கு அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டு பெண் குழந்தை பிறந்தது. பிறந்து மூன்று நாள் ஆன நிலையில் குழந்தைக்கு பால் கொடுத்த சிறிது நேரத்தில் திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலன் இல்லாமல் குழந்தை உயிரிழந்தது. இது குறித்து குழந்தையின் தந்தை இளங்கோவன் அரசு மருத்துவமனை காவல்நிலையத்தில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடிப்பதற்கு பணம் தர மனைவி மறுத்ததால் கணவர் தூக்கு போட்டு தற்கொலை.
மதுரை செல்லூர் மீனாட்சிபுரம் அண்ணா தெருவை சேர்ந்தவர் செல்வம் மகன் அருண் பாண்டி 28.இவர் மனைவி அமிர்தவல்லி 27.இவர் பேக்கரி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அருண்பாண்டிக்கு நிரந்தர வேலை இல்லை .குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். மனைவி வேலை செய்யும் இடத்திற்கு சென்று குடிக்க பணம் கேட்டுள்ளார்.
அதற்கு அவர் பணம் தர மறுத்துவிட்டார் .இதனால் மணமுடைந்த கணவர் அருண்பாண்டி வீட்டில் மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இந்த சம்பவம் குறித்து மனைவி அமிர்தவல்லி செல்லூர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் உயிரிழந்த அருண்பாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நண்பர் பேசாமல் இருந்ததால் பட்டதாரி புரோகிதர் தூக்கு போட்டு தற்கொலை.
மதுரை திருப்பரங்குன்றம் சன்னதி தெரு சுப்பையா மகன் சிவபாலன் 30.இவர் பி.பி.ஏ. பட்டதாரி ஆவார். புரோகிதர் வேலை செய்து வந்தார். இவருடைய நண்பர் சில நாட்களாக இவரிடம் பேசவில்லை. இதனால் மணமுடைந்து காணப்பட்ட சிவபாலன் நண்பருக்கு போன் செய்து தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறியுள்ளார். இதை தொடர்ந்து அவரது வீட்டில் அறையை பூட்டிக்கொண்டு மின் விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவருடைய அண்ணன் ராஜ்குமார் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடிபோதையில் கல்லூரி மாணவரைத் தாக்கிய வாலிபர் கைது
மதுரை, மகபூம்பாளையம் சர்வோதயா முதல் குறுக்கு தருவை சேர்ந்தவர் முஸ்தபா குமார் பாட்ஷா மகன் முகம்மதுஇம்தியாஸ் 19 .இவர் ஆரப்பாளையம் டி.டி.ரோட்டில் ரோட்டில் மெடிக்கலுக்கு சென்று இருந்தார் .அப்போது 19 வயது மதிக்கத்தக்க பாலிமர் ஒருவர் குடிபோதையில் நடு ரோட்டில் தகராறு செய்து கொண்டிருந்தார்.
இதை முகமதுஇம்தியாஸ் தட்டி கேட்டார் .கண்டித்தார்.இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் பீர் பாட்டிலை உடைத்து முகமது இம்தியாஸை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து அவர் கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தாக்கிய ஆரப்பாளையம் வேலர் தெரு பரமசிவம் மகன் வினோத் 28 என்ற வாலிபரை கைது செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu