தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்த ஐந்து பேர் கைது

தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்த ஐந்து பேர் கைது
X

பைல் படம்

மதுரையில் நடந்த பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய 35 பேரை போலீஸார் கைது செய்தனர்

கத்தி முனையில் ரூ 450 வழிப்பறி செய்த 3 வாலிபர்கள் கைது.

மதுரை, உசிலம்பட்டி செல்லம்பட்டி,பூதிபுரம் ஏ. புதுப்பட்டியை சேர்ந்தவர் ஒச்சுகாளை 30.இவர், ஜெய்ஹிந்த்புரம் இரண்டாவது மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.அவர் சுந்தரராஜபுரம் மார்க்கெட் அருகே சென்றபோது 3 வாலிபர்கள் அவரை வழிமறித்தனர். அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி ஒச்சுக்காளையிடம் இருந்து ரூபாய் 450 ஐ வழிப்பறி செய்துவிட்டனர்.

இந்த வழிப்பறி குறித்து, ஒச்சுக்காளை ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் ஜெய்ஹிந்த்புரம் சஞ்சய் 23, ஜாகிர் உசேன் 22, சூர்யா என்ற ஆட்டோ பாஸ்கர் 21 ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.

ஹோட்டல் உரிமையாளரை தாக்கி பணம் பறித்த ஆறு பேர் கைது.

மதுரை செல்லூர் மீனாம்பாள்புரம் பாரதிதாசன் ரோட்டை சேர்ந்தவர் மகீத்ரபீக்ஒலி43.இவர் பீபிகுளம் முல்லை நகரில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலுக்கு வந்த ஆறு பேர் அவரை கத்தியை காட்டி மிரட்டி அவரை தாக்கினர். அவரிடம் இருந்து ரூபாய் 5ஆயிரத்தை பறித்துச் சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து உரிமையாளர் மகுதுரபீக்ஒலி தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் அவரிடம் பணம்பறித்த பீபிகுளம் யோகராஜ் 31, கார்த்திகேயன் என்ற வெள்ளையன் கார்த்திக் 31, கோகுல் விஜய் 29,அனிபாண்டி ராஜா 46, கிருஷ்ணன் என்ற ஜப்பான் ராஜா 3,1 சுரேஷ் 31 ஆகிய ஆறு பேரையும் கைது செய்தனர்.

மதுரையில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 13 பேர் கைது

மதுரை கரிமேடு உதவி ஆய்வாளர் ரத்தினவேலு. இவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார் இவர் புட்டுத்தோப்பு கோவில் வைகை ஆற்று பகுதியில் சென்ற போது பதுங்கி இருந்த ஐந்து பேரை சுற்றி வளைத்து பிடித்தார் .அவர்களில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார் .பிடிபட்ட நபர்களிடம் சோதனை செய்தார் அவர்களிடம் பயங்கர ஆயுதங்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்து அந்த நபர்களிடம் விசாரணை நடத்தினார்.

விசாரணையில் யோகநாத சாமி தெற்கு மடம் செல்வ மகன் கோட்டை என்ற முத்துமாணிக்கம் 25, ஆரப்பாளையம் கிராஸ் ரோடு ராஜு மகன் அருள்மணி 26, ஆரப்பாளையம் யோகநாத சாமி சன்னதி தெரு ராஜ் மகன் யோகேஸ்வரன் 24, ஆரப்பாளையம் இரண்டாவது தெரு மாடசாமி மகன் மகேஸ்வரன் 31, பொன்நகரம் பிராட்வே முத்து மகன் ராஜா 25, மேலமடை எழில் நகர் சேவுகபெருமாள் மகன் விஜய் 25 என்றுதெரியவந்தது.அவர்களில் ஐந்து பேரை கைது செய்தார் .ஒருவர் கொட்டை என்ற முத்துமாணிக்கம் தப்பி ஓடிவிட்டார். அவரை தேடி வருகின்றனர்.

எம் கே புரத்தில் ஆயுதங்களுடன் எட்டு பேர் கைது

தெற்கு வாசல் சப் இன்ஸ்பெக்டர் முருகேசன். இவர் தெற்கு வாசல் காஜா தெரு முனீஸ்வரர் கோவில் அருகே ரோந்துப்பணி ஈடுபட்டிருந்தார் .அப்போது அந்தப்பகுதியில் 11 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தனர். அவர்களை சுற்றிவளைத்து பிடித்தார். அவர்களில் எட்டு பேர் பிடிபட்டனர். மூன்று பேர் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட நபர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்கள் இருந்தன்.அவற்றை பறிமுதல் செய்தார்.

பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்திய போது சோலையழகுபுரம் வினோத்குமார் 19 மகன் குமார் 24 பிரகாஷ் 19 சதீஷ்,மதன்குமார் 19, வினோத் என்ற பட்டு வினோத்,பிரகாஷ்19, மற்றும் 17 வயது சிறுவர்கள் மூன்று பேர் உட்பட எட்டு பேர் என்று தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய சிவா,சபரி, ஆறுமுகம் ஆகிய மூன்று பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். மதுரையில் ஒரே நாளில் எம் கே.புரம் மற்றும் கரிமேடு பகுதியில் மொத்தம் 13 பேரை போலீசார் ஆயுதங்களுடன் கைது செய்தனர்.

தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்த ஐந்து பேர் கைது

மதுரை , திருப்பரங்குன்றம் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன். இவர் சந்நிதி தெரு வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது செந்தாமரை மாரியம்மன் மண்டபம் அருகே கும்பல் ஒன்று அடுத்தடுத்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தனர். அவர்கள் ஐந்து பேர் அடங்குவர்.

அவர்களை சுத்தி வளத்து பிடித்தார் .பிடிபட்ட நபர்களிடம் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளையும் விற்பனை செய்த பணம் ரூ 24,680ஐயும் பறிமுதல் செய்தார் .பிடிபட்ட நபர்களிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் திருப்பரங்குன்றம் ஜெய்லானுதீன் அஜிஸ் 62, அண்ணா நகர் கிருஷ்ணகுமார் 55, வில்லாபுரம் கார்த்திகேயன் 53, தெற்கு வாசல் குலாம் ரசூல் 54, பசுமலை ராஜா உசேன் 41என்று தெரிய வந்தது. அவர்கள் ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர்.

பெண்ணிடம் பணம் திருடிய மற்றொரு பெண் கைது

மதுரை,விளாச்சேரி கலைஞர் நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மனைவி கலாதேவி 42. இவர் பெரியார் பேருந்து நிலையம் இரண்டாவது பிளாட்பாரத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அவரிடம் காத்திருந்த சக பயணி அவர் வைத்திருந்த பணம் ரூபாய் ஆயிரத்தை திருடமுயன்றார். அப்போது கலாதேவி கூச்சல் போட்டு கலாதேவியும் மற்றும் சிலரும் அவரை கையும் களவுமாக விரட்டிப் பிடித்தனர் .பின்னர் அவரை திடீர் நகர் போலீஸ் நகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த பெண்ணிடம் போலீசார் விசாரித்த போது வெளிச்சநத்தம் மந்தை தெரு ஜோதிமணி 40 என்று தெரிய வந்தது .அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!