மதுரை சிறையில் போக்சோ கைதி மரணம்: போலீஸார் விசாரணை
அவனியாபுரத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
மதுரை , வில்லாபுரம் மீனாட்சி நகர் சௌடேஸ்வரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சசிகுமார் மகன் சுதாகரன் 23. இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து, அவருடைய அம்மா மகேஸ்வரி அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்குப் பதிவு செய்து, வாலிபர் சசிக்குமாரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரிமேட்டில் தமிழாசிரியர் தீக்குளித்து தற்கொலை.
மதுரை கரிமேடு ஞானொளிவுபுரம் விசுவாசபுரி முதல் தெருவை சேர்ந்தவர் சகாய செல்வராஜ். இவர் தனியார் பள்ளி ஒன்றில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். சில நாட்களாக வீட்டில் உள்ளவர்களிடம் பேசாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் தனியாக இருந்தபோது வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் .இவரது தற்கொலை குறித்து மனைவி மரியா சகாய செரமன் கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தமிழ் ஆசிரியரின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மத்திய சிறையில் போக்சோ விசாரணை கைதி திடீர் மரணம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கொள்ளக்கொண்டம் நக்கனேரி தெற்கு தெருவை சேர்ந்தவர் தாசையா 62.இவரை 2019 ஆம் ஆண்டு போக்சோ வழக்கில் கைது செய்து விசாரணை கைதியாக மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி ருந்தார். இவர் கிட்னி நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிறையில் திடீரென்று மயங்கி விழுந்தார். சிறை மருத்துவமனையில் அவருக்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் செல்லும் வழியிலேயே தாசையா பரிதாபமாக உயிரிழந்தார் .இந்த சம்பவம் குறித்து, சிறை அதிகாரி மகேஸ்வரி கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தாசையாவின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வியாபார நஷ்டத்தால் மனைவியை பிரிந்து வாழ்ந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
மதுரை மிளகரனை மந்தை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நடராஜன் மகன் கார்த்திக்ராம் 29. இவருக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இதனால் மன அழுத்தத்தில் இருந்து வந்தகார்த்திக்ராம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலை குறித்து தந்தை நடராஜன் கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் கார்த்திக் ராமின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணா நகரில் மருத்துவமனைக்கு சென்ற மூதாட்டி மின்சாரம் தாக்கி மரணம்
மதுரை சௌராஷ்டிரா புரம் கவி பாரதியார் தெருவை சேர்ந்தவர் சந்திரா 64. இவர் உடல்நல குறைவால் அந்தப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார். அப்போது மின்கம்பத்தை அவர் அறியாமல் தொட்டுவிட்டார்.அங்கு அறுந்து தொங்கிக் கொண்டிருந்த மின்வயரில் அவர் கைபட்டது.இதனால் ,அவர்மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட மூதாட்டி சந்திரா சம்பவ இடத்திலேயே பலியானார்.இந்த சம்பவம் குறித்து, அவர் மகன் ராஜா அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, மூதாட்டி சந்திராவின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுவனை தூண்டிவிட்டு பாட்டி வீட்டில் திருடச் செய்து: இரண்டு பெண்கள் உள்பட நான்கு பேர் கைது
விருதுநகர் இந்திரா நகர் பைபாஸ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் செல்லபாண்டி மனைவி சுஜிதா 35. இவரது மைனர் மகன் ஆழ்வார்புரத்தில் உள்ள பாட்டியை பார்க்க அடிக்கடி வந்துசெல்வார்.இதனால், அவருடன் அன்பாக பேசுவது பொல் அதே பகுதியைச்சேர்ந்த நான்கு பேர் நடித்துள்ளனர்.அவர்கள் சிறுவனை தூண்டிவிட்டு பாட்டி வீட்டில் பணம் திருடி வரும்படி கூறிஉள்ளனர்.அவர்கள் கூறியபடியே பாட்டிவீட்டில் பீரோவிலிருந்து ரூ47ஆயிரத்தை பேரன் திருடிச்சென்றுவிட்டான்.அந்த பணத்தை அவர்கள் நான்கு பேரும் வாங்கி பயன்படுத்திக் கொண்டனர்.
இது சிறுவனின் தாய் சுகிதாவுக்கு தெரிய வந்தது. அவர் அவர்களிடம் கேட்டபோது, சிறுவனையும் அவரையும் அவர்கள் மிரட்டி உள்ளனர். இதனால், சிறுவனின் தாய் சுகிதா மதிச்சியம் போலீசில் புகார் செய்தார். போலீசார் நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் சிறுவனை தூண்டி விட்டு பணம் திருடச்செய்து பணம் பறித்த நான்கு பேர்கள் ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த அர்ஜூன் மனைவி அந்நியம்மாள் என்ற அம்முனி 33, செல்லப்பாண்டி மகள் ஜான்சி ராணி என்ற மீனா 21, மீனாம்பாள்புரம் சத்தியமூர்த்தி நகர் நான்காவது தெரு பாலு மகன் சாலமன் ராஜா 24, ஆழ்வார்புரம் முருகன் மகன் கார்த்திக் 26 ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.
நத்தம் புது பாலத்தில் பெண்ணிடம் இரண்டு பவுன் செயின் பறிப்பு
மதுரை, மேல பனங்காடி ஸ்ரீநகர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் அண்ணாதாய் 65 .இவர் தல்லாகுளம் பகுதியில் பொருள்கள் வாங்கிக் கொண்டு நத்தம் புது பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை பின்தொடர்ந்து பைக்கில் சென்ற இரண்டு ஆசாமிகள் அவர் அணிந்திருந்த இரண்டு பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்று விட்டனர் .இந்த சம்பவம் குறித்து, அண்ணாதாய் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரிடம் செயின்பறித்த ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu