மதுரை மத்திய சிறையில் போலீஸார் திடீர் சோதனை.. கஞ்சா, பீடி கட்டுகள் பறிமுதல்...

மதுரை மத்திய சிறையில் போலீஸார் திடீர் சோதனை.. கஞ்சா, பீடி கட்டுகள் பறிமுதல்...
X

மதுரை மத்திய சிறைச்சாலை. (கோப்பு படம்).

மதுரை மத்திய சிறையில் போலீஸார் திடீரென மேற்கொண்ட சோதனையின்போது செல்போன், கஞ்சா உள்ளிட்ட தடை செயய்ப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழகம் முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் உள்ள சிறைவாசிகளிடம் செல்போன் புழக்கம் இருப்பதாகவும், சிறைக்குள் தடை செய்யப்பட்ட பீடி, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் நடமாட்டம் இருப்பதாகவும் புகார் எழுந்தன. இதனால், சிறைச்சாலைகளில் போலீஸார் அவ்வப்போது அதிரடி சோதனை மேற்கொண்டு செல்போன் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்வது வழக்கம்.

இதேபோல, மதுரை மத்திய சிறையில் 1500-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். இந்தநிலையில், கைதிகளிடம் செல்போன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பழக்கம் அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து, மதுரை மத்திய சிறையில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட முடிவு செய்தனர். அதன்படி, போலீஸார் இன்று திடீரென மதுரை மத்திய சிறைக்குள் குழுவாக சென்று திடீரென பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.

மூன்று போலீஸ் உதவி கமிஷனர் தலைமையில் 5 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் தனித்தனி குழுவாக பிரிந்து சென்று ஒவ்வொரு அறைகளில் உள்ள கைதிகளிடம் மற்றும் கைதிகளின் அறைகளில் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், அங்குள்ள சமையல் அறை, குளியல் அறை உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தினர் வ சில கைதிகள் மறைத்து வைத்திருந்த கஞ்சா, பீடி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதேபோன்று ,பெண் கைதிகளின் அறைகளிலும் சோதனை நடைபெற்றது. நேற்று தண்டனை கைதிகள் சிலர் கஞ்சா பொட்டலங்களை மறைத்து சிறைக்குள் கொண்டுவந்ததாக புகார் எழுந்தது. அதன் தொடர்ச்சியாக அதிரடி சோதனை நடைபெற்றது என போலீஸார் தெரிவித்தனர்.

சிறைக்குள் தடை செய்யப்பட்ட செல்போன், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதேபோன்று, அடிக்கடி எதிர்பாராத நேரத்தில் திடீரென சோதனை மேற்கொள்ளப்படும் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!