மதுரையில் தெருக்களை சுத்தம் செய்து வேட்பாளர் நூதன வாக்கு சேகரிப்பு

மதுரையில் தெருக்களை சுத்தம் செய்து வேட்பாளர் நூதன வாக்கு சேகரிப்பு
X

மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் முத்துராமன், தெருக்களை சுத்தம் செய்தார்.

மதுரையில், மக்கள் நீதிமய்யம் கட்சி வேட்பாளர், தெருக்களை சுத்தம் செய்து நூதன முறையில் வாக்குகளை சேகரித்தார்.

மதுரை மாநகராட்சி 37-வது வார்டில், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், அண்ணாநகர் முத்துராமன் போட்டியிடுகிறார். இவர், தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

அவ்வகையில் இன்று, தெருக்களை சுத்தம் செய்து வாக்குகளை சேகரித்தார். அவருடன், மக்கள் நீதி மையத்தின் நிர்வாகிகள், ராஜதுரை, சக்தி மகேஷ், சரவணன், ராஜ்குமார் திலீப், மகேந்திரன், குணா அலி, நாகேந்திரன் உள்ளிட்டோர், டார்ச் லைட் சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தனர்.

Tags

Next Story
வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததால் மாநகராட்சி பில் கலெக்டர் மீீது புகார்!