மதுரையில் வியாபாரியை மிரட்டி பணம் பறித்த காவல் ஆய்வாளர் மனு தள்ளுபடி

மதுரையில் வியாபாரியை மிரட்டி பணம் பறித்த காவல் ஆய்வாளர் மனு தள்ளுபடி
X

மதுரை உயர் நீதிமன்றம் கிளை

துறை ரீதியான விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும் என கூறி காவல் ஆய்வாளர் வசந்தி தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்த அர்சத் என்பவர் பேக் கம்பெனிக்கு தேவையான பொருட்களை வாங்க ஜூலை மாதம் 5 தேதி 10 லட்ச ரூபாய் பணத்துடன் மதுரை வந்தார்.

தேனி ரோடு, அருகில் வந்த போது பால்பாண்டி, பாண்டியராஜன், உக்கிரபாண்டி, சீமைச்சாமி மற்றும் நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வசந்தி ஆகியோர் அர்சத் வைத்திருந்த 10 லட்ச ரூபாய் பணத்தை மிரட்டி பறித்துக் கொண்டதாக கடந்த ஆண்டு ஜூலையில் கொடுத்த புகாரில் மதுரை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து காவல் ஆய்வாளரை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு நடைபெற்றுவரும் நிலையில், குற்ற வழக்கு விசாரணை முடியும் வரை துறை ரீதியான விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும் என காவல் ஆய்வாளர் வசந்தி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அனால், குற்ற வழக்கு விசாரணை முடிய எவ்வளவு காலம் ஆகும் என தெரியாது என்பதால், அவர் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.

Tags

Next Story
smart agriculture iot ai