மதுரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான தாழ்தள பஸ் துவக்கம்..!

மதுரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான தாழ்தள பஸ் துவக்கம்..!
X

தாழ்தள பேருந்தை தொடக்கி வைத்த அமைச்சர் 

மதுரையில் மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் புதிய தாழ்தள பேருந்து சேவையினை அமைச்சர் துவக்கி வைத்தார்

மதுரையில் மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் புதிய தாழ்தள பேருந்து சேவையினை அமைச்சர் துவக்கி வைத்தார்.

மதுரை.

மாற்றுத்திறனாளிகள் வீல் சேருடன் பயணிக்கும் வகையில், புதிய தாழ்தள சிறப்புப் பேருந்துகளை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். மதுரை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், பெரியார் பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் வீல் சேருடன் பயணிக்கும் வகையில் புதிய தாழ்தள சிறப்புப் பேருந்துகளை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.

மதுரை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மண்டலங்களில் உள்ள 40 பணிமனைகள் மூலம் 2286 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன, நாள் ஒன்றுக்கு 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.

தமிழக முதலமைச்சர் , துவக்கி வைக்கப்பட்ட விடியல் பயணத் திட்டத்தின் கீழ் சுமார் 6 இலட்சத்திற்கும் மேற்பட்ட மகளிர்கள் பயணம் செய்கின்றனர். இதன் மூலம் மாதம் ஒன்றுக்கு ரூபாய் 2000 வரை சேமிப்பு ஏற்பட்டு மகளிர்கள் பொருளாதார மேம்பாடு அடைந்து வருகின்றனர். இவ்வாண்டில் இதுவரை 418 புதிய பேருந்துகள் ரூபாய் 188.22 கோடி மதிப்பீட்டில் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது, 9 புதிய பேருந்துகள் ரூபாய் 8,24 கோடி மதிப்பீட்டில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயணம் செய்யும்வகையில்,புதிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்தின் முக்கிய அம்சம் மாற்றுத்திறனாளிகள் வீல் சேருடன் பயணிக்கும் வகையில் இடவசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.

பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்றவுடன் அதிலிருந்து சறுக்குப்பாதை உதவியுடன் மாற்றுத்திறனாளிகள் வீல் சேருடன் ஏறியவுடன், பேருந்தில் அதன் உரிய இடத்தில், பெல்ட்டால் வீல் சேர் நகராமல் இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆர். சிங்காரவேலு, பொது மேலாளர் பி.மணி மற்றும் போக்குவரத்து கழக தொழிற்சங்க பிரதிநிதிகள், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!