மதுரையில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்: அமைச்சர் தொடக்கம்

மதுரையில் நடைபெற்ற கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாமை தொடக்கி வைத்த அமைச்சர் மூர்த்தி.
சிறப்பு மருத்துவ முகாம்: அமைச்சர்:
தமிழ்நாடு முதலமைச்சர் , சீரிய செயல் பாட்டால் தமிழகத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் சிறப்பாக செயல் படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நீரிழிவு மற்றும் உயர்ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு வீடு தேடி சிகிச்சை அளிப்பதோடு, மருந்துகளும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.கொரோனா பரவல் தடுப்புபணியில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தமிழக முதலமைச்சர், ஏழை எளியோர் வசிக்கும் இடத்திலேயே சிறப்பு மருத்துவச் சேவை அளிக்கும் வகையில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமில்,இதயநோய், மகப்பேறு, சிறுநீரகம், பல், கண், தோல், காது, மூக்கு, தொண்டை, எலும்பு மூட்டு மற்றும் மனநல மருத்துவம் ஆகிய 10 துறை சிறப்பு மருத்துவர்கள் மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும், இம்முகாமில், இரத்த எச்.பி. அளவு, இரத்த அழுத்த பரிசோதனை, இரத்த சர்க்கரை அளவு, இரத்த கொழுப்பு அளவீடு, மலேரியா இரத்தத் தடவல், இ.சி.ஜி. கர்ப்பபைவாய், புற்றுநோய் பரிசோதனை, ஸ்கேன், கண்புரைஅளவு, 12-14 வயதுடைய சிறார்களுக்கு கோர்பிவேக்ஸ் தடுப்பூசி, 15-18 வயதுடையவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 60 வயது மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசியும்.
கொரோனா சளி பரிசோதனை மற்றும் தடுப்பு அறிவுரைகள், டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. மருத்துவர்கள் பொது மக்களுக்கு பரிசோதனை செய்து, நோயை கண்டறிந்து மேல் சிகிச்சை தேவைப்படுவோர் மேல் சிகிச்சைக்காக, அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு, உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. பொதுமக்களை பரிசோதித்து நோய்களை முதலிலேயே கண்டறிந்து. அதற்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவது இத்திட்டத்தின் சிறப்பு அம்சமாகும்.
முன்னதாக மண்டலம் 4 வார்டு எண்.80 சேதுராஜன் பத்மா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமினை மாண்புமிகு மேயர், ஆணையாளர், துணை மேயர் ஆகியோர் துவக்கி வைத்து பொதுமக்களுக்கு பரிசோதனை மேற்கொள்வதை பார்வையிட்டனர்.மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இதுபோன்று நடைபெறும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமில், கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாநகராட்சியின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் பூமிநாதன், வெங்கடேசன், நகர்நல அலுவலர் மரு.ராஜா, உதவி ஆணையாளர்கள் தட்சிணாமூர்த்தி, அமிர்தலிங்கம், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், மாமன்ற உறுப்பினர்கள் கதிரவன், துரைப் பாண்டி, உதவிநகர்நல அலுவலர் மரு.தினேஷ்குமார், உதவி செயற் பொறியாளர்மனோகரன், உதவிப்பொறியாளர்கள் தியாக ராஜன், திருமதி.மஞ்சுளாதேவி, சுகாதார அலுவலர்கள்; வீரன், விஜயகுமார், மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu